Home /News /lifestyle /

காலை உணவுக்கு ஓட்ஸ் அடை தோசை : ஹெல்தியானது..டேஸ்டியானது..!

காலை உணவுக்கு ஓட்ஸ் அடை தோசை : ஹெல்தியானது..டேஸ்டியானது..!

ஓட்ஸ் அடை தோசை

ஓட்ஸ் அடை தோசை

காலையில் உங்கள் வேலையையும் எளிதாக மாற்றும்...

ஓட்ஸ் கொண்டு பல வகையான ஆரோக்யமான உணவுகளை சமைக்கலாம். அந்த வகையில் இந்த அடை உங்களுக்கு பிடித்த உணவாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப்
வெள்ளரிக்காய் - 1/4 பாதி
குடை மிளகாய் - 2 tsp
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 tsp

அரைக்க :

சின்ன வெங்காயம் - 7
சீரகம் - 1/4 tsp
இஞ்சி - 1/2 துண்டு
தக்காளி - 1/2 பாதி
கேரட் - 1
ஓமம் - 1/4 tsp
கருவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் பொடி - 1/2 tsp
மிளகுப் பொடி - 1/2 tsp
உப்பு - தே.அ



செய்முறை :

ஓட்ஸை 15 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ளுங்கள். அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக்கொள்ளுங்கள்.

ஓட்ஸ் ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அரைத்த விழுதை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் குடை மிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிப்போடுங்கள். மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கடையில் வாங்கும் மிளகாய் தூளின் தரத்தைக் கண்டறிய FSSAI வெளியிட்ட டிப்ஸ்...

தற்போது அனைத்தையும் சேர்ந்து பிசைந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக அதை அடை போல் தட்டி எடுத்து தோசைக்கல்லின் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுங்கள். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

அவ்வளவுதான் ஓட்ஸ் மசாலா அடை தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breakfast, Oats

அடுத்த செய்தி