Home /News /lifestyle /

காலை உணவை ஹெல்தியாக்கும் இன்ஸ்டன்ட் பீட்ரூட் ஓட்ஸ் இட்லி

காலை உணவை ஹெல்தியாக்கும் இன்ஸ்டன்ட் பீட்ரூட் ஓட்ஸ் இட்லி

பீட்ரூட் ஓட்ஸ் இட்லி

பீட்ரூட் ஓட்ஸ் இட்லி

இதை டயட் பிரியர்கள் மட்டுமன்றி குழந்தைகள் , பெரியவர்கள் என யாரும் சாப்பிடலாம்.

ஓட்ஸ் டையட் பிரியர்களின் விருப்பமான உணவு. அதை வெறுமனே சுடு தண்ணீரில் மிக்ஸ் செய்து சாப்பிடுவதை விட இப்படி வித்தியாசமான முறையில் பீட்ரூட் கலந்து இட்லியாக செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இதை டயட் பிரியர்கள் மட்டுமன்றி குழந்தைகள் , பெரியவர்கள் என யாரும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை - 100 கிராம்
ஓட்ஸ் - 75 கிராம்
உப்பு - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 250 மில்லி லிட்டர்
தயிர் - 120 கிராம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிளை - சிறிதளவு
முந்திரி - 2 டீஸ்பூன்
சீவிய பீட்ரூட் - 200 கிராம்
உப்பு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 30 மில்லி லிட்டர்
தண்ணீர் - வேக வைக்க தேவையான அளவு



செய்முறை :

ரவை மற்றும் ஓட்ஸை பொன்னிறமாக எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக்கொள்ளவும்.

ஓட்ஸை மட்டும் மிக்கிஸியில் மாவு போல் அரைத்துக்கொள்ளவும். அதை ரவையுடன் கலந்துகொள்ளவும். அதோடு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

தற்போது தண்ணீர் ஊற்றி கலக்கவும். அதில் தயிரும் சேர்த்துக் கிளறவும். அதை 8 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

உங்களுக்கு உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாதாம்... மீறினால் நிலைமை மோசமாகிவிடும்

அந்தச் சமயத்தில் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு , உளுந்து சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கறிவேப்பிளை , பீட்ரூட் சேர்த்துக் கிளறவும். வதங்கியதும் அந்தக் கலவையை ஓட்ஸ் மாவில் கொட்டி நன்குக் கிளறவும்.

அவ்வளவுதான் மாவு தயார். தற்போது அதை இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 13 - 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். சுவையான இட்லி தயார்.

இதற்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Idli dosa batter, Oats

அடுத்த செய்தி