முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஃபிங்கர் சிக்கன் இப்படித்தான் செய்யனுமா..? ஈசியான ரெசிபி இதோ...

ஃபிங்கர் சிக்கன் இப்படித்தான் செய்யனுமா..? ஈசியான ரெசிபி இதோ...

ஃபிங்கர் சிக்கன்

ஃபிங்கர் சிக்கன்

மென்மையான கோழி மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையானது அலாதியான ருசியை தெரிகிறது. ஃபிங்கர் சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நீங்கள் அசைவ பிரியர் என்றால் சிக்கன் பிடிக்கத்தவராக இருக்க வாய்ப்பில்லை. சிக்கன் பிரைடு ரேஸ், சிக்கன் 65, சிக்கன் பிரியாணி, சிக்கன் சுக்கா, கிரேவி என பல்வேறு ரெசிபிகள் உள்ளன. அந்த வரிசையில் நீங்கள் வித்தியாசமான, சுவையான ஒரு ரெபியை ருசிக்க விரும்பினால், ஃபிங்கர் சிக்கன் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

ஃபிங்கர் சிக்கன் விரைவான மற்றும் எளிதான செய்முறையாகும். இதனை நீங்கள் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். மென்மையான கோழி மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையானது அலாதியான ருசியை தெரிகிறது. ஃபிங்கர் சிக்கன் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

தேவையான பொருட்கள் :

சிக்கன் (எலும்பு இல்லாதது) - 1/2

தேங்காய் எண்ணெய்/ஆலிவ் ஆயில் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

பிரட் தூள் - கப்

மிளகு - 1 டீஸ்பூன்

வெங்காய தூள் - 1 டீஸ்பூன்

முட்டை - 1

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

பூண்டு - 5 துண்டு

பார்மேசன் சீஸ் - 1/4 கப்

இஞ்சி - 1 துண்டு

மைதா மாவு - 1/2 கப்

தயிர் - ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

சிக்கனை நன்கு கழுவி, நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு பவுலில் சிக்கன், தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் போட்டு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பை சேர்த்து நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் எண்ணெய்யில் இருந்து பொரித்தெடுத்து, இதன்மீது எலுமிச்சை சாறினை பிழிந்து விடுங்கள், சுவையான ஃபிங்கர் சிக்கன் ரெடி.

மாங்காயில் இப்படியொரு அருமையான சட்னி செய்யலாமா..? வித்தியாசமான சுவையில் ரெசிபி இதோ...

குறிப்புகள்

* சிக்கனை சமைப்பதற்கு முன்னர் தண்ணீரில் உப்பு சேர்த்து ஊறவைக்கவும், இது சிக்கனில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.

* பின்னர் சிக்கனை மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும், இது சிக்கனை அமைப்பதை தக்கவைத்து கொள்ள உதவுகிறது.

* சுவை அதிகரிக்க, சிக்கனை குறைந்தது 1 மணிநேரம் மசாலாப் பொருட்கள் சேர்த்து ஊற வைப்பது நல்லது.

First published:

Tags: Chicken recipe