Home /News /lifestyle /

நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறதா கிரீன் டீ..? ஆய்வு சொல்லும் தகவல்

நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறதா கிரீன் டீ..? ஆய்வு சொல்லும் தகவல்

 கிரீன் டீ

கிரீன் டீ

தொற்று காலத்தில் பலருக்கும் உடல் எடை கூடிவிட்ட நிலையில் எடையை குறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். எடை குறைக்கும் முயற்சிகளில் வொர்ட்கவுட்ஸ்களுடன் பலரும் கிரீன் டீ-யையும் சேர்த்து உள்ளார்கள். 

தொற்று காலத்தில் பலருக்கும் உடல் எடை கூடிவிட்ட நிலையில் எடையை குறைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். எடை குறைக்கும் முயற்சிகளில் வொர்ட்கவுட்ஸ்களுடன் பலரும் கிரீன் டீ-யையும் சேர்த்து உள்ளார்கள்.

எனவே சமீப ஆண்டுகளில் நாட்டின் விருப்பமான பானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது கிரீன் டீ. உடல் எடையை குறைக்க உதவும் இது ஒரு ஆரோக்கியமான பானமாக பார்க்கப்படும் அதே நேரத்தில், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்த பானம் என்பதை ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளிப்படுத்தி உள்ளது. தொப்பையை கரைத்து எடை இழப்பிற்கு உதவுவது மட்டுமல்ல, நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைக்கவும் கிரீன் டீ உதவும் என்று அந்த ஆய்வு கூறுகிறது

டைப் 2 நீரிழிவு (Type 2 diabetes) என்பது வரும் 2045-ஆம் ஆண்டளவில் 693 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொது சுகாதார சவாலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. டைப் 2 நீரிழிவு என்பது மாரடைப்பு, பக்கவாதம், குருட்டுத்தன்மை, சிறுநீரக செயலிழப்பு போன்ற பல மோசமான உடல்நல விளைவுகளுடன் தொடர்புடையது மற்றும் முன்கூட்டிய இறப்புக்கான முக்கிய ஆபத்து காரணியும் ஆகும்.Nutrition and Metabolism journal என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட 27 பரிசோதனைகளின் மெட்டா பகுப்பாய்வின் அடிப்படையிலான ஆய்வு, கிரீன் டீ அருந்துவது சாப்பிடுவதற்கு முன்பான ரத்த குளுக்கோஸ் செறிவூட்டலில் சாதகமான விளைவை காட்டி இருக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாயு தொல்லையால் அவதியா..? இந்த எளிமையான யோகாசனங்களை முயற்சி செய்யுங்கள்.!

மேலும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றில் கிரீன் டீயின் சாத்தியமான நன்மைகளை இந்த ஆய்வு முடிவு கோடிட்டு காட்டி இருக்கிறது. இருப்பினும், கிரீன் டீ குடிப்பது ஃபாஸ்டிங் பிளட் இன்சுலின் அல்லது HbA1c - ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட ரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை அளவிடும் ஒரு சோதனையை கணிசமாக பாதிக்கவில்லை.

சீனாவில் உள்ள ஹுவாஜோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, 2,194 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 27 ஆய்வுகளின் முடிவுகளை மொத்தமாக ஆய்வு செய்தது. இறுதியாக சேகரிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் கிரீன் டீ குடிப்பது ஃபாஸ்டிங் பிளட் குளுக்கோஸை கணிசமாகக் குறைக்கிறது என்பதை காட்டுகிறது.எனினும் குறுகிய கால சோதனைகள் கிரீன் டீ-யானது கணிசமான அளவு ஃபாஸ்டிங் குளுக்கோஸை குறைத்துள்ளது என்பதை காட்டினாலும், கிளைசெமிக் கன்ட்ரோலில் கிரீன் டீ-யின் கூடுதல் விளைவுகளை மதிப்பிட நீண்ட கால சோதனைகள் தேவை என்றும் ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

இந்நிலையில் ஒரு நாளைக்கு 6 அல்லது அதற்கு மேற்பட்ட கப் கிரீன் டீ அருந்துபவர்களுக்கு, வாரத்திற்கு ஒரு கப் கிரீன் டீ குடிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் குறைவாக உள்ளதை மற்றொரு ஆய்வு வெளிப்படுத்தி இருக்கிறது. கிரீன் டீ ஆன்டிஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின், மினரல்ஸ் மற்றும் ஃபிளாவனாய்டு போன்ற பாலிபினால்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள சேர்மங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இது நீரிழிவு நோயைத் தடுப்பதில் பங்காற்றுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Green tea

அடுத்த செய்தி