இஸ்லாமியர்கள் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. வழக்கமாக இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயாரிக்கப்படும். ’நோன்புக் கஞ்சி’ எனச் சொல்லப்படும் அதை பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்வதோடு, பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்கள் அதை அருந்துவார்கள். நோன்புக் கஞ்சி ருசியாக இருக்கும் என்பதாலேயே அது மிகப் பிரபலம். அதை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 8
பட்டை - 1
கிராம்பு - 4
தக்காளி - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
வெங்காயம் - 1 (மீடியம் அளவு)
கேரட் - 1 (சின்னதாய் நறுக்கியது)
மல்லிக்கீரை - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 3
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
செய்முறை:
முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, ப்ரஷர் குக்கரில் பச்சை அரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரை, கேரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
மேலும் படிக்க... டேஸ்டியான பிரியாணி செய்யணுமா? இந்த மசாலா பொடியை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
பின்னர், அடுப்பை சிம்மரில் போட்டு இன்னொரு 5 விசில் வரும்வரைக் காத்திருக்கவும். தேவைக்கேற்ப, கஞ்சி பதமாக வரும்வரை சிம்மரில் கொதிக்கவிடுங்கள். பிறகு, அதனை தேங்காய் பாலுடன் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிவந்த பின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
மேலும் படிக்க... ஆம்பூர் சிக்கன் பிரியாணி வீட்டிலேயே செய்வது எப்படி ?...
பின்னர் ஒரு கடையில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை , கிராம்பு போட்டு மல்லிக்கீரை தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தாளிப்பை தயார் நிலையிலுள்ள கஞ்சியில் சேர்த்து ஒருமுறை கிளறினால், கம கமனு ருசியான நோன்பு கஞ்சி ரெடி...
குறிப்பு: தேவைப்பட்டால் இத்துடன் மட்டன் எலும்புக் கறியையும் சேர்த்து வதக்கி கொள்ளலாம்.. கூடுதல் ருசியாக இருக்கும்...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.