• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தக்காளி விலை ஏறிவிட்டதா..? கவலையை விடுங்க... தக்காளியே இல்லாத இந்த 2 குழம்பு சமைச்சு பாருங்க..

தக்காளி விலை ஏறிவிட்டதா..? கவலையை விடுங்க... தக்காளியே இல்லாத இந்த 2 குழம்பு சமைச்சு பாருங்க..

தக்காளி இல்லாத குழம்பு வகைகள்

தக்காளி இல்லாத குழம்பு வகைகள்

குறையில்லாத மதிய உணவு சமைக்க வேண்டும் எனில் யோசிக்காமல் இந்த இரண்டு குழம்பு டிரை பண்ணுங்க...

  • Share this:
தக்காளி விலை கடந்த வாரங்களாக உயர்ந்துகொண்டே வருகிறது. தக்காளியை பார்த்தாலே பயப்படும் அளவுக்கு ஆகிவிட்டது. இது சிக்கனமாக குடும்பத்தை சமாளிப்போருக்கு கட்டுப்படியாகாது. இருந்தாலும் நன்கு சாப்பிட வேண்டும். குறையில்லாத மதிய உணவு சமைக்க வேண்டும் எனில் யோசிக்காமல் இந்த இரண்டு குழம்பு டிரை பண்ணுங்க...

கறிவேப்பிலை குழம்பு :

வறுத்து அரைக்க

கறிவேப்பிலை - 2 கப்
கடலை பருப்பு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
துவரம் பருப்பு - 1 tsp
மிளகு - 1/4 tsp
வெந்தயம் - 1/2 tsp
பெருங்காயத்தூள் - சிறு கட்டி
மிளகாய் - 6

தாளிக்க

கடுகு - 1 tsp
சீரகம் - 1 tsp
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 tsp
சாம்பார் வெங்காயம் - 7
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தே.அ



செய்முறை :

முதலில் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் கடாயில் வறுத்து ஆற வைத்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக அரைத்த விழுதுடன் புளியும் கரைத்து ஊற்றிவிடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். சிறு தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

குழம்பு சுண்டியதும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி வைத்துவிடுங்கள். கறிவேப்பிலை குழம்பு தயார்.

தினமும் 10 கிராம் வெந்தயம் சாப்பிட்டால் நல்லதா..? எப்போது.. எப்படி சாப்பிட வேண்டும்..?

வத்தக் குழம்பு :

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் வத்தல் -  1/ 4 கப்
சின்ன வெங்காயம் - 7
கறிவேப்பிலை - 1 கொத்து
வெந்தயம் - 1/2 tsp
புளி - எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க :

மிளகு - 1/2 tsp
துவரம் பருப்பு - 1 tsp
வெந்தயம் - 1/4 tsp
சீரகம் - 1/4 tsp
தனியா - 2 tsp
வரமிளகாய் - 6
பெருங்காயத்தூள் - 1/2 tsp



செய்முறை :

வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் சுண்டைக்காய் வத்தல் பூண்டு சேர்த்து வதக்குங்கள்.

சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக புளி கரைசலை ஊற்றுங்கள்.

பின் அரைத்த பொடியை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இறுதியாக இரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் வத்தக்குழம்பு தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: