ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஃபிரிட்ஜில் வைக்காமலே வெண்ணையை நீண்ட நாட்கள் சேமிக்க 3 டிப்ஸ்..!

ஃபிரிட்ஜில் வைக்காமலே வெண்ணையை நீண்ட நாட்கள் சேமிக்க 3 டிப்ஸ்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

உப்பு சேர்க்கப்படாத வெண்ணையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரம் வரை குளிரூட்டப்படாமல் தாங்கும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உணவுக்கு தனித்துவ சுவை அளிப்பதில் வெண்ணைக்கு எப்போதும் தனியிடமுண்டு. அதை பாதுகாக்க பல வீடுகளில் வெண்ணையை ஃபிரிஜ்ஜில் வைப்பார்கள். ஆனால் அதை அப்படி வைக்கத் தேவையில்லை என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை.யூஎஸ்டியே வின் அறிக்கைப் படி பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களில் வெண்ணை மட்டும்தான் நீண்ட நாட்களுக்குக் கெடாத பொருள் என்றும் அதை ஃபிரிஜ்ஜில் வைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.

  80 சதவீத கொழுப்பைக் கொண்ட வெண்ணை நீர் பதத்தை மிகக் குறைவாகக் கொண்டது என்பதால் பாக்டீரியாக்கள் எளிதில் தாக்கக் கூடிய காரணிகள் மிகக் குறைவு.அதுமட்டுமன்றி பாலை நன்கு காய்ச்சி அதிலிருந்து தயாரிக்கப்படுவதால்..படிந்திருக்கும் கிருமிகளும் முற்றிலும் அழிந்துவிடும். இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இருக்காது.

  ஆக..இனி ஃபிரிஜ்ஜில் வெண்ணையை எடுக்கும்போது கத்தியால் குத்தி அதோடு சண்டையிடும் அவசியமில்லை. லாவகமாக நழுவி விழுமாறு ஸ்பூனைக் கொண்டே எடுக்கலாம்.

  Read More : குளிர்காலத்தில் நன்மைத்தரும் நெய்..! 5 விதமான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு..

  இது போல வெண்ணெய் கெடாமல் இருப்பதற்கு பிற காரணங்கள் : 

  உப்பு சேர்க்கப்பட்டிருப்பது வெண்ணை கெடாமல் இருப்பதற்கான கூடுதல் பலம். எனவே ஃபிஜ்ஜில் வைக்காமல் அறையின் வெப்பநிலையில் காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் அதிகபட்சமாக 10 நாட்கள் வரை தாங்கும்.
  உப்பு சேர்க்கப்படாத வெண்ணையாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரம் வரை குளிரூட்டப்படாமல் தாங்கும்.
  வெண்ணையை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைத்திருப்பதாலும் வெண்ணை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் நன்கு வெயில் நிறைந்த காலங்களில் வெண்ணையை ஃபிரிஜ்ஜில் வைத்தல் தவறில்லை.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Butter, Cooking tips