நாம் சாப்பிட கூடிய உணவின் தன்மை என்பது நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, உற்பத்தி செய்ய கூடிய உணவின் தன்மையும், அதை தயாரிக்க கூடிய உணவின் தன்மையும் முன்பை காட்டிலும் தற்போது கண்டுகொள்ளாத நிலையில் இருக்கிறது. இதை உறுதி செய்வதற்காக நாட்டின் உணவுத்துறை இதுகுறித்த பல வழிமுறைகளை அவ்வப்போது வகுத்து வருகிறது. அந்த வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சங்கம் (FSSAI) உணவுகள் தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதுகுறித்த அறிக்கைகளை உணவு துறை வெளியிட்டு வருகிறது. இது உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் முக்கிய விதிமுறைகளையும் குறிப்பிட்டு வருகிறது. முன்னதாக இந்த உணவு சங்கம் சைவ உணவுப் பொருட்கள் குறித்த விதிகளை வெளியிட்டு இருந்தது, மேலும் தற்போது ஆன்லைன் உணவு தளங்களில் வழங்கப்படும் உணவின் லேபிளிங் பற்றிய விரிவான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. FSSAI சங்கமானது அனைத்து உணவு வணிக ஆபரேட்டர்களுக்கும் (FBOs) ஜூலை 1 முதல் உணவு சேவை நிறுவனங்களால் ஊட்டச்சத்து மதிப்பைக் காண்பிப்பது தொடர்பான அதன் விதிமுறைகளை உறுதி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளது.
இந்த உணவு சங்கம் வழங்கிய கடிதத்தில், “அனைத்து ஈ-காமர்ஸ் உணவு வணிக ஆபரேட்டர்களும் தங்கள் ஆன்லைன் தளங்களில் ஊட்டச்சத்து தகவல்களைக் காண்பிப்பதற்கான மொபைல் பயன்பாடுகள் உட்பட அனைத்து விவரங்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதே போன்று தங்களின் தளங்களில் பதிவுசெய்யப்பட்ட உணவு வணிக ஆபரேட்டர்கள் அவற்றை புதுப்பிக்க முடியும்.
மேலும் விற்பனைக்கு வழங்கும் ஒவ்வொரு உணவும்/உணவும் பற்றிய தகவலும் இதில் அடங்கும்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருள் என்னவென்றால், ஆன்லைன் உணவு தளங்களில் உணவை விற்கும் அனைத்து நபர்களும் கலோரிஃபிக் மதிப்பு மற்றும் ஊட்டச்சத்து, ஒவ்வாமை தொடர்பான தகவல்களை கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்பதாகும்.
பிளாஸ்டிக் தடை... இதனால் சமையலறையில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னென்ன..?
FSSAI சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அருண் சிங்கால் இந்த விதிமுறைகள் குறித்து மேலும் சில தகவல்களை பதிவு செய்தார். ஆன்லைனில் எந்த வகையான உணவை ஆர்டர் செய்தாலும் அதன் ஊட்டச்சத்து, ஒவ்வாமை சார்ந்த தகவல்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் இந்த தகவல்கள் உதவும். மேலும் தயாரித்த உணவில், லேபிள்கள் இருக்கும், ஆனால் சமைத்த உணவுகளுக்கு, லேபிளிங் இருப்பதில்லை.
சமைத்த உணவுக்கான மெனு லேபிள்கள் நுகர்வோரை ஆரோக்கியமாக சாப்பிடுவதை உணர்த்தும். எனவே, உணவு லேபிள்கள் மிகவும் அவசியம் என்று அருண் சிங்கால் கூறினார். இந்த கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற தவறினால் அபராதம் வழங்கப்படும். மேலும் அதற்கு பிறகும் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.