Home /News /lifestyle /

நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வது?

நெத்திலி மீன் தொக்கு எப்படி செய்வது?

நெத்திலி தொக்கு

நெத்திலி தொக்கு

Nethili thokku | பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து கொள்வது நல்லது...

மேலும் படிக்கவும் ...
நெத்திலி மீன் தொக்கு வைப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் - 1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 1/2 கிலோ

பச்சை மிளகாய் - 6 எண்ணிக்கை

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

கறிவேப்பிலை - ஒரு கீற்று

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

தேங்காய்பால் - கால் கப்

உப்பு - தேவையான அளவு

நெத்திலி தொக்கு


செய்முறை:

1. முதலில் நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு சிவந்ததும் பூண்டை தட்டி போடவும். சிறிது வதங்கியதும், வெங்காயம் போட்டு வதக்கவும்.

2. பிறகு தக்காளி போட்டு வதக்கி, பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத் தூளை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பின்னர் புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு அதில் நெத்திலி மீனையும், தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து, திக்காக வந்ததும் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.

குறிப்பு:

நெத்திலி மீனில் உள்ள முள்ளை எடுத்து விடுவது நல்லது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Fish, Food

அடுத்த செய்தி