• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!

திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!

karthigai Deepam | திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
நெய் அப்பம், பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது.

தேவையான பொருட்கள்: 

பச்சரிசி – 1 கப்

வெல்லம் – 3/4 கப்

தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டி

ஏலக்காய் – 1

சமையல் சோடா – 3 சிட்டிகை

உப்பு – 1/8 தேக்கரண்டி

நெய் – தேவைக்கேற்ப



செய்முறை

முதலில் அரிசியை கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து, கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தை மிகவும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து உருக்கவும். அதன் பின்னர் வடிகட்டி, அரைத்த மாவில் சேர்க்கவும்.இத்துடன் தேங்காய் துருவல், பொடித்த ஏலக்காய், சமையல் சோடா, உப்பு சேர்த்து கலக்கவும்.

அதன் பின்னர் பணியார சட்டியை சூடு செய்து, 1/2 தேக்கரண்டி நெய், ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும். அதில் 3/4 பங்கு மாவை ஊற்றவும். மிதமான தீயில், மூடி வேக விடவும். சிவந்ததும் பணியாரங்களை திருப்பவும்.  இரு புறமும் சிவந்ததும், எடுத்து, சூடாக பரிமாறலாம். இப்போது நெய் அப்பம் ரெடி.

மேலும் படிக்க... திருக்கார்த்திகைக்கு சொஜ்ஜி அப்பம் செய்து பாருங்களேன்!

திருக்கார்த்திகைக்குப் பொரி உருண்டை செய்வது எப்படி?

திருக்கார்த்திகைக்கு நெய் அப்பம் செய்ய ரெசிபி!      

திருக்கார்த்திகைக்கு கடலை உருண்டை செய்யலாம்... 

சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணப் பாயாசம்

உளுந்து களி.. காலை உணவுக்கு சிறந்தது...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: