உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!

பனைவெள்ளம், எலுமிச்சை, ஏலக்காய், சுக்குப்பொடி, தண்ணீர், வேப்பம் மரத்தின் இலை அல்லது புதினா, ஆகிவற்றை கலந்து ஒரு ஆரோக்கியமான பானகமாக தயார் செய்வார்கள். இதனை வெலியின் போது பருகினால் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும்

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!
பானங்கள் அருந்தலாம் : இளநீர், மோர், ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ் என இவற்றைக் குடிப்பதால் ஹேங்ஓவர் குறையும்.
  • News18
  • Last Updated: May 8, 2019, 2:12 PM IST
  • Share this:
கொளுத்தும் கோடை வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து வறண்டு விடுவதால், ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இயற்கை பானங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ளலாம்.

கோடை காலத்தில் உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக நம் வீட்டி உள்ள தாத்தா பாட்டி வெயில் காலத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்பார்கள்.

அது மட்டுமில்லாமல் குளிர்ச்சி தன்மை அதிகம் நிறைந்த பானங்களான மோர், இளநீர், பானகம், கரும்பு, தர்பூசணி, வெள்ளரிகாய் ஆகிவற்றை அருந்த சொல்வார்கள். இவர் அனைத்தும் இயற்கையாக நமக்கு கிடைக்கக்கூடிய மற்றும் எளிமையாக கிடைக்கக்கூடிய பானங்கள்.


ஆனால் இன்றைய தலைமுறையினர் யாரும் இதை கடைப்பிடிப்பதில்லை. கோடைக்காலத்தில் உடலின் வெப்பத்தை தணிக்க இது போன்ற இயற்கையான முறையில் கிடைக்ககூடிய பானங்களை அருந்துவது சிறந்தது.

மோர்: மோர் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுக்கும் திறன் கொண்டவை. மேலும் இது செரிமான பிரச்சனையையும் சரிசெய்ய உதவும். வெயில் காலத்தில் அடிக்கடி மோர் அருந்தினால் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

இளநீர்: இயற்கை தந்த இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண் என எல்லாவற்றையும் சரி செய்ய வல்லது. எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது. எனவே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் இளநீரைப் அருந்தினால், நாளடைவில் உடல் வெப்பமானது சீராக இருக்கும்.வெள்ளரிக்காய்: வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது அதனை ஜூஸ் போட்டு குடித்தால் சரி அது உடலை ஈரபதத்துடன் வைத்துக்கொள்ளும்.

தர்பூசணி: நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும். மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவுகிறது.

தர்பூசணி


பானகம்: கிராமங்களில் திருவிழாவின் போது வீட்டின் வாசலில் வைத்து அனைவருக்கும் இந்த பானகத்தை கொடுபார்கள். அவற்றில் பனைவெள்ளம், எலுமிச்சை, ஏலக்காய், சுக்குப்பொடி, தண்ணீர், வேப்பம் மரத்தின் இலை அல்லது புதினா, ஆகிவற்றை கலந்து ஒரு ஆரோக்கியமான பானகமாக தயார் செய்வார்கள்.

இதனை வெயிலின் போது பருகினால் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கும் மற்றும் இந்த பானகத்தில் பனைவெல்லத்தை சேர்ப்பதினால் உடலுக்கு இரும்புச்சத்து கிடைக்கும், விட்டமின் சி நிறைந்தது.

கரும்பு ஜூஸ்: கரும்பு ஜூஸ் குளுமைத் தன்மை கொண்டது. உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான குழாய் போன்றவற்றை சீராகவும் சம்நிலையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading