• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு மழை காலத்தில் இந்த சூப் செய்து கொடுங்கள்... சளி தொல்லை இருக்காது...

குழந்தைகளுக்கு மழை காலத்தில் இந்த சூப் செய்து கொடுங்கள்... சளி தொல்லை இருக்காது...

நாட்டுக்கோழி சூப் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம வாங்க...

  • Share this:
மழைகாலத்தில் குழந்தைகளுக்கு நாட்டுக்கோழி சூப் செய்து கொடுத்தால் நல்லது. சளி, இரும்பல் தொல்லைகள் வராது.

தேவையான பொருள்கள்

சிக்கன் - 100 கிராம் (நாட்டுக்கோழி)

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் + சீரகத் தூள் - 1/2 மேஜைக்கரண்டி

மிளகுத் தூள் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க 

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1/4

பூண்டு - 2 பல்



செய்முறை 

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும். குக்கரில் அரைத்த விழுது, சிக்கன், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணிர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். சிக்கன் சூப் ரெடி. பின்னர் பரிமாறும் போது தேவைகேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.

மேலும் படிக்க... சண்டே கருவாட்டு குழம்பு வைச்சு சாப்புடுங்கள்.. அருமையாக இருக்கும்... 

மழை காலத்திற்கு ஏற்ற இதமான மிளகு சூப்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: