இன்று உலக பீட்ஸா தினம்: பீட்ஸாவின் நன்மை, தீமை குறித்த ஒரு அலசல்!

அமெரிக்கர்கள்தான் பீட்ஸாவை தங்களது முக்கிய உணவாகக் கொண்டாடி வருகின்றனர்.

இன்று உலக பீட்ஸா தினம்: பீட்ஸாவின் நன்மை, தீமை குறித்த ஒரு அலசல்!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: February 9, 2019, 6:39 PM IST
  • Share this:
காக்கா முட்டை படத்தில் இடம்பெற்ற 'பீட்ஸாவை விட ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு’ என்கிற வசனம் பலரை சிரிக்க வைத்திருக்கலாம். அது உண்மையோ, பொய்யோ பீட்ஸா என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம் என்று கூறுவோர்தான் இங்கு அதிகம். அந்த கர்வத்தில்தான் பீட்ஸாவும்  ‘நான் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு ’ என்று மெச்சிக் கொள்கிறது.

அமெரிக்கர்கள்தான் பீட்ஸாவை தங்களது முக்கிய உணவாகக் கொண்டாடி வருகின்றனர். அதனால்தான் அங்கு ஒவ்வொரு வருடமும் மூன்று பில்லியன் பீட்ஸாக்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் மற்ற உணவுகளைக் காட்டிலும் பீட்ஸாவை ’சிறந்த உணவு’ என்றும் கொண்டாடுகின்றனர்.

பீட்ஸா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?


பிரெட், காய்கறிகள், கறி, சீஸ் என உடலுக்கு புரோட்டீன், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை அளிக்கக் கூடிய ஊட்டச் சத்து மிக்கது என போற்றப்படுகிறது.  பீட்ஸா ஆலிவ் எண்ணெய், தக்காளி, காய்கறிகள், சீஸ் , கறி என சமைப்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, ஆலிவ் எண்ணெய் மற்றும் சீஸ் நல்ல கொழுப்பை அளிக்கிறது, தக்காளி மற்றும் காய்கறிகள் ஊட்டச்சத்தை அளிக்கின்றன என்று கூறப்படுகிறது. எல்லாம் சரிதான். இருப்பினும் பீட்ஸா உடலுக்கு தீங்கானது என்று எவ்வாறு கருதப்படுகிறது?

2006-ம் ஆண்டு மார்பகப் புற்றுநோய் வர பீட்ஸாவே காரணம் என’ ‘யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் கேன்ஸர் பிரிவென்ஷன்’ கூறியது. அதேபோல் பீட்ஸாவால் குடல் புற்றுநோய் வரும் என்று 2003-ம் ஆண்டிலும், இதய நோய் வரும் என்று 2004-ம் ஆண்டிலும் அதே ஆராய்ச்சி நிறுவனம் கூறியது. இதுதொடர்பான விளக்கத்தையும் அந்த நிறுவனம் அளித்திருந்தது.

அதில் , பீட்ஸா தயாரிக்கும் மாவு முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு தயாரிப்பதால் அதில் கலோரிகள் முழுமையாக அகன்றுவிடுகின்றன. இதனால் கோதுமை, மைதா என எதுவாயினும் அதை மறுசுத்திகரிப்பு செய்தால் அதில் உள்ள சத்துகள் நீங்கி விடுகின்றன. இப்படிப்பட்ட உணவு இதயக் கோளாறு, நீரிழிவு போன்ற நோய்கள் வரக் காரணமாக அமையும் என்று கூறியுள்ளது. மேலும் அது உடல் எடையை அதிகரித்தல், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

டொமேட்டோ சாஸ் :  தக்காளி ஃபிரெஷாக இருக்கும் வரை அது உடலுக்கு நன்மையே. ஆனால் அதுவே பதப்படுத்தப்பட்டு நாள் கணக்கில் வைக்கப்பட்டால் ? ஆபத்தே அதிகம். தக்காளி சாஸ் கெட்டுப் போகாமல் இருக்க அதிக அளவிலான சோடியம் மற்றும்  பதப்படுத்த பயன்படும் மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் இதயம், மூளை, சிறுநீர்ப்பை மற்றும் ரத்தக் குழாய்கள் ஆகியவை பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் கூறியுள்ளது.

பதப்படுத்தப்படும் இறைச்சி: காய்கறிகளைத் தவிர்த்து இறைச்சியில் தீங்கு விளைவிக்கக்கூடிய நைட்ரேட்ஸ் போன்றவை பதப்படுத்தலுக்காக சேர்க்கப்படுவதாகவும் இது கடுமையான ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், குடல் புற்றுநோய் போன்ற பல நோய்களை ஏற்படுத்தும் என விளக்கியுள்ளது.

சீஸ்: ஒரு பீட்ஸாவில் 20 கிராம் சீஸ் சேர்க்கப்படுவதாகவும், இதனால் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அப்போது ஆரோக்கியமான பீட்ஸாவை உண்ணவே முடியாதா ?

முடியும். ஆசைக்கு அவ்வப்போது பீட்ஸாவை சாப்பிடலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.  மாவு தயாரிக்கும் முறையிலும் பல வகைகள் இருக்கின்றன. சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரித்த பிரெட், காலிஃப்ளவர் மற்றும் முட்டை சேர்த்து தயாரிக்கப்பட்ட பிரெட்களை தேர்வு செய்து உண்ணலாம். இதை கீடோ பீட்ஸா என்று அழைக்கின்றனர். அதேபோல் வீட்டில் தயாரிக்கப்பட்ட பதப்படுத்தப்படாத ஃப்ரெஷ் சாஸ்களும் சில கடைகளில் கிடைக்கின்றன. சீஸிலும் குறைந்த அளவு கேட்டு கஸ்டமைஸ்டு செய்துகொள்ளலாம்.
First published: February 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்