சமையல் காரியான நாம் இருவர் நமக்கு இருவர் சரண்யா!

நாம் இருவர் நமக்கு இருவர் சரண்யா

சீரியலில் அப்பாவின் பிசினஸை தனியாக பார்த்துக் கொள்ளும் துணிச்சலான பட்டதாரி பெண்ணாக நடிக்கிறார்.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யாவாக நடிக்கும் நடிகை ஜனனி செய்த மத்தி மீன் வறுவல் தான் டுடே ஸ்பெஷல்.

  நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யா ரோலில் நடிக்கும் நடிகை ஜனனி அசோக் குமார் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை. ஜீ தமிழியில் ஒளிப்பரப்பான செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஃபேம்ஸ் ஆனார். இதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தார். அதன் பின்பு மீண்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மாப்பிள்ளை தொடரில் நடித்தார். குறுகிய காலத்திலே சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் படையைக் கொண்டுள்ள இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் அப்பாவின் பிசினஸை தனியாக பார்த்துக் கொள்ளும் துணிச்சலான பட்டதாரி பெண்ணாக நடிக்கிறார்.

  இந்நிலையில், ஜனனியும் மற்ற சின்னத்திரை பிரபலங்களை போலவே கொரோனா லாக் டவுண் காலத்தில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் மேக்கப், டிராவல், ரூம் டூர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இந்த லிஸ்டில் குக்கிங் வீடியோக்களை போடவும் தொடங்கினார். அதாவது வாரத்திற்கு ஒருமுறை அவரே தனது கையால் சமைக்கும் வீடியோக்களை ஃபுட் பிளே லிஸ்டில் வெளியிட்டு வருகிறார்.

  அந்த வகையில் அவருக்கு மிகவும் பிடித்த கோயம்புத்தூர் ஸ்பெஷலான மத்தி மீன் வறுவல் ரெசிபியைத்தான் இன்று பார்க்க போகிறோம். இந்த மீன் வறுவலுக்கு ஜனனியே தனது கையால் தனியாக மசாலா அரைத்து அவரின் அம்மா செய்வது போல் செய்து காட்டியுள்ளார். இதற்கு தேவையான பொருட்களை பார்த்தால் மிகவும் குறைவு தான். மத்தி மீன், வெறும் மிளகாய் தூள், பூண்டு, புளி, உப்பு இருந்தால் போதும்.



  முதலில் தேவையான அளவு இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அதை அம்மியில் நன்கு மைய பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த மசாலாவை ஒவ்வொரு மீனிலும் தனித்தனியாக எடுத்து தடவ வேண்டும். மொத்தமாக மசாலாவை மீனில் கொட்டி கிளர கூடாது. ஒவ்வொரு மீனில் தனியாக மசாலாவை தடவி அதை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு தவாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் மசாலா தடவி உள்ள மீனை மிதமான சூட்டில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும்.

  அவ்வளவு தான் ஈஸியான முறையில் மத்தி மீன் வறுவல் ரெடி. இது நடிகை ஜனனி வீட்டு ஸ்டைல் மத்தி மீன் வறுவல். குறிப்பாக செட்டிநாடு சுவையில் இந்த மீன் வறுவலை அவர் செய்துள்ளார். நீங்களும் உங்கள் வீட்டில்இதை ட்ரை பண்னி பாருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: