உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? உங்களுக்கான கட்டுரைதான் இது. முதலில், உடல் எடை குறைக்க நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சலிப்பாகவும் தண்டனையாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, முதலில் உடலில் உள்ள கலோரிகளை குறைக்காவிட்டால் பின்வரும் வழிகள் பலனளிக்காது:
- வெதுவெது நீரில் எலுமிச்சை, தேன் கலந்து குடிப்பது
- ஆப்பிள் சிடர் வினிகர்
- சத்தான ஷேக்ஸ்
- டீடாக்ஸ் டீ மற்றும் ஸ்மூதீஸ்
முதலில், நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். உடல் எடையை குறைப்பது என்பது உங்கள் உடலை வருத்திக்கொண்டு, சாப்பிடாமல் இருந்துதான் உடல் எடையை குறைக்க முடியும் என்பது கட்டுக்கதை. முறையான உணவும் உடற்பயிற்சிகளுமே உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கும். உடல் எடை குறைக்கும்போது உணவில் பின்வருவனவற்றை தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
- அரிசி (சரியான அளவு- இரவிலும் கூட சாப்பிடலாம்)
- ரொட்டி (ஆட்டா வகையாகதான் இருக்க வேண்டும் என்பதில்லை)
- தோசை
- உருளைக்கிழங்கு
- தேநீர்
- பீட்ஸா (எப்போதாவது)
- சாக்லேட்டுகள் (எப்போதாவது)
- பிரியாணி (எப்போதாவது)
- பால்
- பிஸ்கெட்டுகள் (அதிக சர்க்கரை இல்லாத)
- பானங்கள் (எப்போதாவது)
Must Read | ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம்… உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?
எந்த உணவுகளையும் நீக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், பின்வருபவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்:
நீங்கள் உட்கொள்ளும் உணவுகளின் கலோரிகள் மற்றும் மேக்ரோக்கள் உங்கள் உடலில் உள்ள கலோரி மற்றும் மேக்ரோ (கொழுப்பு கார்போஹைட்ரேட் மற்றும் புரதம்) தேவைகளுக்கு ஏற்ப அளவோடு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
மேல் கண்ட உணவுகள் எதுவுமே ‘தூண்டுதல் உணவுகள்’ (trigger foods) அல்ல. அதாவது, இவை எதுவுமே நாம் அதிகளவில் சாப்பிடுவதற்கு வழிவகுக்காது.
மேலும், உடலில் உள்ள கொழுப்பை குறைக்க, உடற்பயிற்சி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
கட்டுக்கதைகள்:
உடல் எடை ஏறுவது என்பது இயல்பான ஒன்று. ஆரோக்கியமான முறையில் அதை குறைப்பதுதான் அதில் உள்ள சூட்சமம். பொதுவாக, உடல் எடையை குறைக்கும்போது சில உணவுகளை நாம் தவிர்த்துவிட வேண்டும் என்ற பரவலான கட்டுக்கதைகள் நம் காதோரம் வந்து செல்லும்.
Must Read | சத்தமில்லாமல் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம்… அறிகுறிகள் என்னென்ன? ஓர் அலர்ட் பார்வை!
அரிசி, பால், பால் பொருட்களை அரவே சாப்பிடக் கூடாது. கிரீன் டீ, பச்சை காய்கறிகள், பழங்கள், ஜூஸ், சத்தான ஸ்மூதிக்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். இதுபோன்ற கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு பலருக்கு புளித்துப்போய் இருக்கும். அதேபோல், பல மணிநேர கார்டியோ பயிற்சிகள் மட்டுமே உடல் எடை குறைப்புக்கு உதவும் என்பது போன்றவை இதில் அடங்கும். ஆனால், உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
உண்மைகள்:
உடல் எடையை குறைப்பது உடலுக்கு நாம் கொடுக்கும் தண்டனை அல்ல. சரியான மற்றும் ஆரோக்கியமான உணவுகள் உங்கள் எடையை பக்க விளைவுகளின்றி குறைக்கும்.
ரொட்டி, அளவான சாதம், நிறைய காய்கறிகள், புரதச்சத்து நிறைந்த உணவுகள், அளவான பால் பொருட்கள், பாலாடைக்கட்டி, மஷ்ரூம் ஆகிய உணவுகளை 80 சதவீதம் எடுத்துக்கொண்டு, டீ, சாக்லேட், பீட்ஸா போன்றவற்றை விரும்பினால் அவற்றை 20 சதவீதம் மட்டும் எடுத்துக்கொண்டால் சிறப்பு. உடற்பயிற்சி என்று வருகையில், உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளும், அதோடு சேர்த்து கார்டியோ பயிற்சிகளும் சரிசமமாக மேற்கொள்வது அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
எனவே, உடல் எடையை மகிழ்வோடு ரசித்து குறைத்தால் பக்க விளைவுகள் இன்றி சுலபமாக குறைக்கலாம். ஆனால், உடலை கட்டுப்படுத்தி வருத்திக் கொண்டுதான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அது வெறும் கட்டுக்கதை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Explainer, Healthy Food, Healthy Lifestyle, Myths, Weight loss