மட்டன் தவா ஃப்ரை ஹோட்டல்களில் கிடைக்கும் மிகவும் பிரபலமான அசைவ ஸ்டார்டர் உணவாகவும். மிருதுவான மட்டன் துண்டுகளுடன் நறுமணம் மிகுந்த இந்திய மசாலாப் பொருட்களை சேர்த்து சமைத்தால் அதன் ருசியே தனி. இருப்பினும் இந்த உணவுகள் ஹோட்டல்களில் மட்டுமே கிடைக்கின்றன. இனி கவலை வேண்டாம். கீழ்காணும் செய்முறைகளை பின்பற்றி வீட்டிலேயே சுவையான மட்டன் தாவா ஃப்ரை செய்து சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் (எலும்பு இல்லாதது) - 250 கிராம்
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ¼ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) - 1
தயிர் - ¼ கப்
தண்ணீர் - ½ கப்
தாவாவில் வறுக்க தேவையானவை:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் (சிறியதாக நறுக்கியது) - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - ¼ தேக்கரண்டி