ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சுவையான சுவரொட்டி கிரேவி செய்ய ரெசிபி..!

சுவையான சுவரொட்டி கிரேவி செய்ய ரெசிபி..!

சுவரோட்டி கிரேவி

சுவரோட்டி கிரேவி

Mutton recipe | ஆட்டின் கறியை வாங்கி நமக்கு பிடித்ததுபோல மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் போன்ற உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவோம். அதையும் தாண்டி அதிக சத்துக்கள் நிறைந்தது சுவரொட்டி. இது கர்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் தரக்கூடியது. இந்த மட்டன் சுவரொட்டியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம் |

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுவரொட்டியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் இதை நாம் சமைத்து சாப்பிடும் பொழுது நம் உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அதுபோல் கர்ப்பிணி பெண்கள்  இதை சாப்பிடும் பொழுது உங்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று இந்த சுவரொட்டியை எப்படி எளிமையான முறையில் சமைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

சுவரொட்டி – 2

சின்ன வெங்காயம் – 10

இஞ்சி பூண்டுவிழுது – 1 டீஸ்பூன்

மசாலா பொடி – 1 டீஸ்பூன்

கரம் மசாலா பொடி – ½ டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – ½ டீஸ்பூன்

தேங்காய் – சிறிதளவு

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், பட்டை, சோம்பு, கடுகு உளுந்து, கிராம்பு, இலவங்கப்பட்டை இலை கருவேப்பில்லை, புதினா, கொத்தமல்லி இலை

செய்முறை

1. சுவரொட்டி வாங்கும் பொழுது அதை வெட்டாமல் வாங்கிக் கொள்ளவும்.

2. முதலில் சுவரொட்டியை சுத்தம் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

3. பின்னர் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

4. அதன் பிறகு மசால அரைக்க  தேங்காய், பெருஞ்சீரகம் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து, அதில் பட்டை, கிராம்பு, இலவங்கப்பட்டை, புதினா மற்றும் சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

6. அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும்.

7.  அதில் சுவரொட்டியை சேர்த்து வேக வைத்த தண்ணீருடன் போட்டு வதக்க வேண்டும். சிறிது நேரத்தில் அதன் கலர் மாறிவிடும்,

8. அத்துடன் மசாலா பொடி, கரம் மசாலா பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். மசாலா வாடை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

9. அதனுடன் 1 டீஸ்பூன் அரைத்து வைத்த கலவையை சேர்த்து வதக்க வேண்டும்.

10.  அதில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி கொத்தமல்லி, புதினா தூவி விட வேண்டும்.  இப்போது சுவையான சுவரொட்டி வறுவல் ரெடி..

குறிப்பு: தோசை, சாதம், சப்பாத்தி மற்றும் இடியாப்பம் இவை அனைத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும். பெண்கள் இதனை சாப்பிட்டால் நல்லது. அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும். இதை பெப்பர் கிரேவியாகவும் செய்து சாபிடலாம். மட்டன் ஈரல் சாப்பிடும் அனைவருக்கும் இது கண்டிப்பாக பிடிக்கும்.

First published:

Tags: Mutton recipes