முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மட்டன் கொத்துக்கறி ஃப்ரை செய்ய ரெசிபி..!

மட்டன் கொத்துக்கறி ஃப்ரை செய்ய ரெசிபி..!

மட்டன் கொத்துக்கறி ஃப்ரை

மட்டன் கொத்துக்கறி ஃப்ரை

Mutton Recipe | மட்டனை கொத்துக்கறியாக செய்து சாப்பிட்டால் சுவை மிகுதியாக இருக்கும்... இந்த மட்டன் கொத்துகறி மசாலாவை உங்கள் பிரியமானவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தோசை, பூரி, சப்பாத்தி, புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் கொத்துக்கறி.  இந்த கொத்துக்கறி செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்துக்கறி - 200 கிராம்,

எண்ணெய் தேவைக்கு ஏற்ப

தாளிக்க...

இடிச்ச பூண்டு - 3,

சின்ன வெங்காயம் - 5,

காய்ந்த மிளகாய் - 5,

கறிவேப்பிலை - சிறிது,

மட்டன் மசாலா - 4 டீஸ்பூன்,

கொத்தமல்லி, புதினா, உப்பு, நெய் - ½ டீஸ்பூன்.

மட்டன் கொத்துக்கறி

செய்முறை

1. முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

2. அதன் பிறகு கொத்தமல்லி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

3. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இடித்த பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

4. வெங்காயம் சற்று வதங்கியதும் மட்டன் கொத்துக்கறி, உப்பு, மட்டன் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொத்துக்கறி வேகும் வரை மூடி வைக்கவும்.

5. இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நெய், புதினா, மல்லி சேர்த்து பரிமாறவும். இப்போது சூப்பரான மட்டன் கொத்துக்கறி மசாலா ரெடி.

First published:

Tags: Deep Fry, Mutton recipes