ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அதிக புரதம்.. டேஸ்டா செய்யலாம் மட்டன் ரத்த பொரியல்.. 10 நிமிடத்தில் செய்திட ரெசிபி!

அதிக புரதம்.. டேஸ்டா செய்யலாம் மட்டன் ரத்த பொரியல்.. 10 நிமிடத்தில் செய்திட ரெசிபி!

மட்டன் இரத்த பொறியல்

மட்டன் இரத்த பொறியல்

Mutton Blood Poriyal | ஆட்டுக்கறியில் உள்ள அனைத்துமே உடலுக்கு அதிகமான புரதத்தை தரக் கூடியதுதான். அந்த வகையில் ஆட்டுக்கறியில் வரும் இரத்ததை பொறியல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். இன்றும் தென் மாவட்டங்களில் விடியற்காலையிலேயே ஆட்டின் இரத்தத்தை வாங்கி வந்து செய்து காலை உணவுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இது சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

ஆட்டு ரத்தம் – 1 கப்

சின்ன வெங்காயம் -150 கிராம்

வர மிளகாய் – 3

சீரகம் – 2 டீ ஸ்பூன்

கடுகு – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – அரை கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைகரண்டி

இரத்த பொறியல்

செய்முறை

ஆட்டு ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் வரமிளகாயை கிள்ளி போடவும்.

நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். ரத்தம் தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும்.

மேலும் படிக்க... வழக்கமான இட்லி இனி வேண்டாம்.. ட்ரை பண்ணுங்க மட்டன் இட்லி.. இதோ ரெசிபி..

அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக தேங்காய் துறுவல் போட்டு கிளறி இறக்கவும். இப்போது அசத்தலான ஆட்டு ரத்தப் பொரியல் தயார். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.

First published:

Tags: Food, Mutton recipes