முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சன்டே ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ஃப்ரை

சன்டே ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ஃப்ரை

மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு

சன்டே ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ஃப்ரையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சன்டே ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ஃப்ரையை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. மட்டன் - கால் கிலோ

2. பெரிய வெங்காயம் - 2

3. தக்காளி - ஒன்று

4. புதினா - 2 கொத்து

5.இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

6.மிளகு தூள் - அரை தேக்கரண்டி

7. சீரகம் - அரை தேக்கரண்டி

8.சோம்பு - அரை தேக்கரண்டி

9.கறிவேப்பிலை - பாதி

10.மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

11.மல்லித் தூள் - அரை மேசைக்கரண்டி

12.மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கல் உப்பு - சுவைக்கு

தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் அம்மியில் வைத்து ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின்னர் மட்டனை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 8 விசில் போட்டு வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்க வேண்டும். பின் வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா மற்றும் நறுக்கின தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விடவும். பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியை போட்டு கிளறி விடவும். அடுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு மிளகாய் வாசனை போகும் வரை கிளறிவிட வேண்டும். பின்னர் அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும்.

10 நிமிடம் கழித்து மட்டன் திக்காக ஆனதும் ஒரு முறை கிளறி விட்டு தேவைப்பட்டால் எண்ணெய்யை ஒரு தாளிப்பு கரண்டியில் கொதிக்க வைத்து அதில் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலையை போட்டு மட்டன் பெப்பர் ஃப்ரையில் ஊற்றவும். இப்போது சன்டே ஸ்பெஷர் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Mutton, Mutton recipes