ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Kanum Pongal Recipe 2023 | காணும் பொங்கலுக்கு அசைவம் செய்பவரா நீங்கள்? இந்த மட்டன் ரெசிபியை ட்ரை பண்ணுங்க...

Kanum Pongal Recipe 2023 | காணும் பொங்கலுக்கு அசைவம் செய்பவரா நீங்கள்? இந்த மட்டன் ரெசிபியை ட்ரை பண்ணுங்க...

மட்டன் நுரையீரல் கிரேவி

மட்டன் நுரையீரல் கிரேவி

Pongal Recipe 2023 | ஆட்டின் நுரையீரலில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு. இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான வீடுகளில் காணும் பொங்கல் அன்று அசைவம் செய்வது வழக்கம்.  சிக்கன், மட்டன், மற்றும் மீன் இறைச்சியை  சமைக்காமல், இந்த முறை புதியதாக ஏதாவது சமையல் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி என்றால் ஆட்டின் நுரையீரலில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள். செம்மயா இருக்கும். அதன் பிறகு இந்த நுரையீரல் கிரேவி கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். 

தேவையான பொருட்கள்

ஆட்டு நுரையீரல் - 250 கிராம்

தக்காளி -2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு

மிளகாய் தூள் - 2   டீஸ்பூன்

கருவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய்  - தேவையான அளவு

தேங்காய் பால்

தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை

1. முதலில் கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2. அதன் பிறகு ஆட்டின் நுரையீரலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் நுரையீரலை தூண்டு தூண்டாக வெட்டி கொள்ளுங்கள்.

3. பின்பு அரை ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

4. இந்த மசாலா கலவையை வெட்டி வைத்த நுரையீரலுடன் சேர்த்து பிரட்டி எடுத்து விட்டு 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

5. பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்தவுடன் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்க வேண்டும்.

6.  அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும். தக்காளி தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.

7. பின் அதனுடன் நம் வெட்டி ஊற வைத்த நுரையீரலை சேர்த்து நன்றாக கிளறி விடவும், தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி விட வேண்டும்.

8. நுரையீரல் பாதி வெந்த நிலையில் இருக்கும்போது அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி வேக வைக்கவும்.

9. நுரையீரல் நன்றாக கொதித்து கிரேவி தனியாக எண்ணெய் தனியாக பிரிந்து வரும்போது அடுப்பினை நிறுத்தி நன்றாக  கிளறிவிட்டு இறக்க வேண்டும்.

10. இப்பொழுது சுவையான ஆட்டு நுரையீரல் கிரேவி ரெடி. இதனை வடித்த சாதம் அல்லது இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

First published:

Tags: Food, Mutton recipes, Pongal recipes