ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மட்டன் கீமா சமோசா வீட்டிலேயே செய்யலாமா..? செய்முறை இதோ...

மட்டன் கீமா சமோசா வீட்டிலேயே செய்யலாமா..? செய்முறை இதோ...

மட்டன் கீமா சமோசா

மட்டன் கீமா சமோசா

அசைவப் பிரியர்களை ஈர்க்கும் மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் டெலிவரி செய்யப்படும் ஸ்னக்ஸ் வகைகளில் அதிகம் இடம் பிடிக்கிறது இந்த மட்டன் கீமா சமோசா.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சமோசா, மாலை நேரத்தை முழுமையாக்கும் ஸ்னாக்ஸ் வகைகளில் தவிர்க்க முடியாதது. அதிலும் அசைவப் பிரியர்களை ஈர்க்கும் மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் டெலிவரி செய்யப்படும் ஸ்னக்ஸ் வகைகளில் அதிகம் இடம் பிடிக்கிறது இந்த மட்டன் கீமா சமோசா. வீட்டிலேயே எவ்வாறு செய்வது ?

  தேவையான பொருட்கள்

  சிறு துண்டுகளாக நறுக்கிய மட்டன் - 500 கிராம்

  இஞ்சி - 1 இஞ்ச்

  கரம் மசாலா பொடி - 1 1/2 TSP

  புதினா இலைகள் - சிறிதளவு

  நறுக்கிய பச்சை மிளகாஉ - 2

  எண்ணெய் - அரை கப்

  மைதா மாவு - 300 கிராம்

  பூண்டு - 3 பற்கள்

  கொத்தமல்லி - சிறிதளவு

  வெங்காயம் - 1

  தயிர் - 1 TSP

  உப்பு - 1 TSP

  செய்முறை :

  பாத்திரத்தில் மைதாவை கொட்டி அதில் உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

  பிசைந்ததும் அவற்றை 5 நிமிடம் கழித்து சிறு பந்து போல் உருட்டிக் கொள்ளவும். அதை சப்பாத்தி போல் திரட்டி தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். இது முற்றிலும் சப்பாத்தி செய்வது போல்தான்.

  ரொட்டிகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

  மட்டனை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.

  தற்போது கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

  வதக்கியதும், மட்டனை சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில் அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

  Also Read : டேஸ்ட் மட்டுமல்ல.. ஆரோக்கியமும்.. வெல்லத்துல இத்தனை நன்மைகள் இருக்கா?

  அடுத்ததாக கரம் மசாலா,தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

  நன்கு வதங்கி பச்சை வாசனை போனதும் அடுப்பை நிறுத்தி கலவையை ஆற விடவும்.

  அடுத்ததாக சுட்டு வைத்துள்ள சப்பாத்திகளை பாதியாக பிரித்து அதை கோன் போல் சுருட்டிகொள்ளவும். மட்டன் கீமா ஸ்டஃப்பை அதில் சேர்த்துக்கொள்ளவும். தற்போது சமோசாவிலுள்ள ஸ்டஃப் வெளியே வராதவாறு அதை இணைக்க முனைகளில் தண்ணீர் தொட்டுத் தடவி மூடி அழுத்திவிடுங்கள்.

  தற்போது கடாயில் வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொறித்து எடுக்கவும். சுவையான மட்டன் கீமா சமோசா தயார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Evening Snacks, Mutton recipes