• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.... வாங்க எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்....

  • Share this:
செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்....

தேவையான பொருட்கள் :

மட்டன் எலும்பு கறி - அரைக்கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2

மட்டன் மசாலா தூள் - 3 டீஸ்பூன்

ப. மிளகாய் - 3

மஞ்சள் தூள் - சிறிதளவு

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மிளகு, சீரகம், கசகசா அரைத்தது - 2 டீஸ்பூன்

தேங்காய் பால் - 1 கப்

எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்

பட்டை - 1 அங்குலம் அளவு

கிராம்பு - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மட்டன் எலும்பு கறியை நன்றாக கழுவி வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதக்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக மசிந்தவுடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும். அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும். பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது, மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

மேலும் படிக்க... சன்டே ஸ்பெஷல் மட்டன் பெப்பர் ஃப்ரை

பின்னர் இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைத்து 5 விசில் வரை விடவும். அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேந்து இருக்கும். விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம். இப்போது சூப்பரான மட்டன் எலும்பு குழம்பு ரெடி.

இதனை மட்டன் பிரியாணிக்கும், இட்லி, தொசைக்கும் வைத்து சாப்பிடலாம்... ருசியாக இருக்கும்...

மேலும் படிக்க... சுவையான கிராமத்து கறி ரசம் செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: