ஆட்டுக்கறியில் உள்ள அனைத்துமே உடலுக்கு அதிகமான புரதத்தை தரக் கூடியதுதான். அந்த வகையில் ஆட்டுக்கறியில் வரும் இரத்ததை பொரியல் செய்து சாப்பிட்டல் எப்படி இருக்கும் தெரியுமா? வாங்க மட்டன் இரத்த பொரியல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்....
ஆட்டுக்கறியில் உள்ள அனைத்துமே உடலுக்கு அதிகமான புரதத்தை தரக் கூடியதுதான். அந்த வகையில் ஆட்டுக்கறியில் வரும் இரத்ததை பொரியல் செய்து சாப்பிட்டல் எப்படி இருக்கும் தெரியுமா? வாங்க மட்டன் இரத்த பொரியல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்....
அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மென்மையாகவும் இருக்கும் என்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
ஆட்டு ரத்தம் – 1 கப்
பர்மீஸ் முட்டை பீஜோபர்மீஸ் முட்டை பீஜோ
சின்ன வெங்காயம் -150 கிராம்
வர மிளகாய் – 3
சீரகம் – 2 டீ ஸ்பூன்
பொட்டுக்கடலை சட்னிபொட்டுக்கடலை சட்னி
கடுகு – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 2 மேசைகரண்டி
செய்முறை
ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். அதில் உப்பு போட்டு நன்றாக கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் வரமிளகாயை கிள்ளி போடவும்.
நன்கு வதங்கிய உடன் அதில் பிசைந்து வைத்துள்ள ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். அடுப்பை மிதமாக எரிய விடவும். ரத்தம் தண்ணீர் வற்றி நன்கு உதிரி உதிரியாக ஆகும் வரை கிளறவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பாக தேங்காய் துறுவல் போட்டு கிளறி இறக்கவும். அசத்தலான ஆட்டு ரத்தப் பொரியல் தயார். குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.