ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மழைக்கு சூடா முட்டைக்கோஸ் பக்கோடா சாப்பிடலாமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி...

மழைக்கு சூடா முட்டைக்கோஸ் பக்கோடா சாப்பிடலாமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி...

முட்டைகோஸ் பக்கோடா

முட்டைகோஸ் பக்கோடா

முட்டைக்கோஸ் பொறியல் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு முட்டைக்கோஸை பார்த்தாலே பிடிக்காமல் இருக்கலாம். அது மாதிரியான நபர்களுக்குமானது தான் இந்த முட்டைக்கோஸ் பக்கோடா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காய்கறியை முதன்மை பொருளாக வைத்து செய்யும் ஸ்நாக்ஸ் வகை சத்துள்ளதாகவும் சுவையானதாகவும் இருக்கும். சில சமயங்களில் குழந்தைகள் நேரடியாக கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் என்பது போன்ற காய்கறிகளைக்கூட சுவையான ஸ்நாக்ஸ் பதார்த்ததில் செய்து அவர்களுக்கு கொடுப்பது வழக்கமான ஒன்று.

  முட்டைக்கோஸ் பொறியல் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு முட்டைக்கோஸை பார்த்தாலே பிடிக்காமல் இருக்கலாம். அது மாதிரியான நபர்களுக்குமானது தான் இந்த முட்டைக்கோஸ் பக்கோடா. இந்த பக்கோடாவை வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். முட்டைக்கோஸ் பக்கோடா செய்முறையை காணலாம்.

  தேவையான பொருட்கள்

  • இரண்டு கப் நறுக்கிய முட்டைகோஸ்
  • அரை கப் கடலை மாவு
  • அரை கப் கார்ன்ஃப்ளார் மாவு (அ) அரிசி மாவு
  • ஒரு சிட்டிகை சோடா உப்பு
  • ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  • தேவையான அளவு (உப்பு, பெருங்காயம்,மிளகாய் தூள்)

  செய்முறை

  ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் கலந்து பின்னர் தண்ணீர் தேவைக்கேற்ப தெளித்து பிசைந்து கொள்ளவும், பக்கோடா என்பதால் உதிரும் அளவு பக்குவத்தில் கலவையின் தன்மை இருக்க வேண்டும்.

  Also Read : மழையை ரசிக்க சூடா ஒரு கப் காஃபியுடன் சுட சுட கடலை மாவு போண்டா சாப்பிட்ட எப்படி இருக்கும்..? ரெசிபி இதோ...

  ஒரு வானெலியில் எண்ணேய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கலவையை உதிரும் வகையில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். பக்கோடா மொறு மொறுவென பொன்னிறத்திற்கு கொஞ்சம் கூடுதல் நிறம் வந்தவுடன் எடுத்துவிடவும்.

  இவ்வளவு தான் முட்டைக்கோஸ் பக்கோடாவின் செய்முறை. சட்னி இல்லாவிட்டாலும் தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Cabbage, Evening Snacks, Monsoon