முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அதுவும் வெயில் காலத்தில் அதிகம் கிடைக்கக் கூடிய கீரை வகை என்பதால் இதை வாரம் ஒரு முறையேனும் பயன்படுத்தலாம். அந்த வகையில் ஒரு நாளைக்கு இப்படி முட்டை ஊத்தி பொரியலாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை - 3 கப்
முட்டை- 3
பச்சை மிளகாய் - 2
சீரகம் ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்கீரையை காம்பு நீக்கி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
பச்சை மிளகாய் பிடிக்காதவர்கள் காய்ந்த மிளகாயையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சீரகத்தை போட வேண்டும். அது பொரிந்தவுடன் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அத்துடன் கீரையை சேர்க்க வேண்டும். முருங்கைக்கீரை நன்றாக வெந்தவுடன் முட்டையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
இப்போது கீரையுடன் முட்டை நன்றாக கலந்து தேங்காய் துறுவல் போட்டதுபோல இருக்கும். அத்துடன் தேவையான உப்பு சேர்த்து சூடாக பரிமாறலாம்.
இது சாம்பார் சாதம், நெய் சாதம் போன்றவற்றிற்கு சூப்பரான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
டிப்ஸ்: கீரை வகைகளை சமைக்கும் போது மூடி போட்டு வைக்காமல், திறந்தே சமைத்தால் அதன் பச்சைநிறம் மாறமால் இருக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.