கறிக் குழம்பு சுவையில் காளான் குழம்பு எப்படி செய்வது..? இதோ ரெசிபி

. இந்த குழம்பு சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

கறிக் குழம்பு சுவையில் காளான் குழம்பு எப்படி செய்வது..? இதோ ரெசிபி
மஷ்ரூம் குழம்பு
  • Share this:
கறிக் குழம்பு சுவையில் காளான் குழம்பு செய்து சாப்பிட்டுப்பாருங்கள். இந்த குழம்பு சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பேஸ்ட் அரைக்க


எண்ணெய் - 2 tsp
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tspசோம்பு - 1 tsp
சின்ன வெங்காயம் - 5
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - 1 tsp

குழம்பு வைக்க :

காளான் - 300 கிராம்
எண்ணெய் - 3 tsp
கிராம்பு , பட்டை, ஏலக்காய்
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1 tsp
குழம்பு மிளகாய் தூள் - 2 tsp
தண்ணீர் - 1 கப்
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

குழம்பு செய்ய குக்கர் எடுத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு சேருங்கள்.

வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமாக வந்ததும் தக்களி, கறிவேப்பிலை , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

முள்ளங்கி முட்டைப் பொடிமாஸ் அருமையான சுவையில் எப்படி சமைப்பது..?

வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து கிளறுங்கள்.

பச்சை வாசனை நீங்கி பேஸ்ட் சுருங்கியதும் காளானை சேர்த்து பிரட்டுங்கள். அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக நன்றாக கிளறி, மூடி 2 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள். இதில் காளானில் உள்ள நீர் வெளியேறிவிடும்.

அடுத்ததாக 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் நன்கு கலந்து குக்கர் மூடி போட்டு மூடி விடுங்கள்.

தலைமுடி கருகருவென வளர உதவும் கறிவேப்பிலை துவையல் - ரெசிபி இதோ

ஒரு விசில் வந்ததும் குக்கரை இறக்கிவிடுங்கள். பிரஷர் இறங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள்.

சுவையான காளான் குழம்பு தயார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading