காளான் குடைமிளகாய் பொரியல் செய்வது எப்படி?

காளான் குடைமிளகாய் பொரியல்

உங்கள் உணவில் அதிக காளான்களைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் பலவிதமான நன்மைகளை பெற முடியும்... அத்தகைய காளானில் ஒரு சூப்பரான பொரியல் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

  • Share this:
காளான் குடைமிளகாய் பொரியல் சப்பாத்திக்கு ஸ்டஃப் பண்ணி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்... காளான் குடைமிளகாய் பொரியல் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

காளான் - 250 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 2 பல்

குடைமிளகாய் - 1

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது



செய்முறை

வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாய், காளானை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

மேலும் படிக்க... இறால் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி...?

தக்காளி குழைய வதங்கியதும் அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது  சூப்பரான காளான் குடைமிளகாய் பொரியல் ரெடி...

மேலும் படிக்க... செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு

 சிக்கன் பொரியல் சாப்பிட்டுருக்கீங்களா?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

சிக்கன் லெக் பீஸ் தெரியும் மட்டன் லெக் பீஸ் தெரியுமா?

சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

கேரளா ஸ்டைல் வாழை இலை மீன் வறுவல் ரெசிபி...
Published by:Vaijayanthi S
First published: