உடலுக்கு தெம்பூட்டும் முருங்கை கீரைசோறு ..! ரெசிபி இதோ

”குறைந்த நேரத்தில் மிக சுவையாக செய்யலாம். மேலும், இந்த சாதம் ஆரோக்யத்திற்கும் நல்லது”

உடலுக்கு தெம்பூட்டும் முருங்கை கீரைசோறு ..! ரெசிபி இதோ
உடலுக்கு தெம்பூட்டும் முருங்கை கீரை சாதம்..செய்ய ரெசிபி இதோ
 • Share this:
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை சோறு செய்ய ரெசிபி

தேவையான பொருட்கள் : • பச்சரிசி - ஒரு கப்

 • துவரம் பருப்பு - கால் கப்

 • முருங்கை கீரை - அரை கப்
 • பெரிய வெங்காயம் - 1

 • உப்பு - தேவையான அளவு

 • நெய் - 2 டீஸ்பூன்

 • உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

 • பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்

 • பச்சரிசி - 2 டீஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 4

 • கொப்பரை துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

 • எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்
தாளிக்க :

 • கடுகு அரை டீஸ் ஸ்பூன்

 • உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ் ஸ்பூன்

 • பூண்டு - 3 பல்

 • எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்

 • காய்ந்த மிளகாய் - 1


ALSO READ : சமையலறையில் இருக்க வேண்டிய 5 வகையான எண்ணெய்கள்
செய்முறை :

 • முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவ வேண்டும்

 • உப்பும் , மூன்றே முக்கால் தண்ணீர் ஊற்றி இரண்டையும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும்,

 • 2 விசில் வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்கி பூண்டு பல்லை சிறு சிறு துண்டுகளாக நசுக்கி கொள்ளுங்கள்.

 • வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து வைத்து அதனை பொடியாக்கி கொள்ளுங்கள்.

 • எண்ணெய் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி சோற்றில் சேர்த்து கொள்ளுங்கள்

 • அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும்,நெய்யையும் சேர்த்து ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள். சுவையான முருங்கை கீரை சோறு ரெடி

First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading