தினசரி உணவில் முருங்கைக்கீரை சேர்த்துக்கொள்ள வேண்டுமா..? உங்களுக்கான முருங்கைக்கீரை தோசை ரெசிபி
தினசரி உணவில் முருங்கைக்கீரை சேர்த்துக்கொள்ள வேண்டுமா..? உங்களுக்கான முருங்கைக்கீரை தோசை ரெசிபி
முருங்கைக்கீரை தோசை
பொதுவாகவே முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் முருங்கைக்கீரை சுவையை சுவாரஸ்யமானதாக மாற்ற இப்படி தோசை சுட்டு சாப்பிட்டுப் பாருங்கள்.
முருங்கைக்கீரை இரும்புச் சத்து நிறைந்த உணவு என்பதால் பலரும் இதை வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவார்கள். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்களும் வாரத்தில் ஒரு முறையேனும் முருங்கைக்கீரை எடுத்துக்கொள்வது நல்லது. பொதுவாகவே முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் முருங்கைக்கீரை சுவையை சுவாரஸ்யமானதாக மாற்ற இப்படி தோசை சுட்டு சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 3
சீரகம் - 1/2 tsp
மிளகு - 1/2 tsp
எண்ணெய் - 1 tsp
தோசை மாவு - 6 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முருங்கைக்கீரையை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு சேர்த்து பொறித்துக்கொள்ளுங்கள்.
பின் பச்சை மிளகாய் , பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இப்போது முருங்கைக்கீரைரை சேர்த்து பிரட்டவும்.
கீரை வெந்ததும் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதோடு சின்ன வெங்காயம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
இதற்கு நல்லெண்ணெய் ஊற்றி தோசை சுட்டால் அருமையாக இருக்கும். காரச்சட்னி பொருத்தமான சைட்டிஷ்
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.