டீ, பிஸ்கட்டை வைத்து குச்சி ஐஸ் தயாரித்த பெண் - வைரலாகும் வீடியோ!

டீ பிஸ்கட் ஐஸ்கிரீம்

வெயில் காலம் என்பதால் டீ, பிஸ்கட்டை சூடாக சாப்பிட்டால் செட்டாகாது. ஆனால் டீ குடிக்கவேண்டும். எனவே இந்த முறையில் சாப்பிட்டால் டீ குடித்த மாதிரியும் இருக்கும். சில்லென்ற உணர்வும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share this:
மும்பையை சேர்ந்த பிரபல ஃபுட் பிளாக்கர் மஹிமா இன்ஸ்டாகிராமில் Diningwithhoot எனும் பக்கம் மூலம் வித்தியாசமான உணவுகளை செய்து பதிவிட்டு வருகிறார். அவரது வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோக்கள் மூலம் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் பிஸ்கட் மற்றும் டீ ஆகியவற்றை பயன்படுத்தி பாப்சிகில்ஸ் (Popsicles) எனப்படும் குச்சி ஐஸ்களை தயாரித்துள்ளார். பிஸ்கட்டுகளை நன்றாக மசித்து, அதில் டீ ஊற்றி ஃப்ரீசரில் சில மணி நேரங்கள் வைத்திருந்தால் குல்ஃபி வடிவிலான இந்த சாய்-பிஸ்கட் பாப்ஸிகில்ஸ் ரெடி.

டீ , பிஸ்கட் காம்போவை பாப்ஸிகில்ஸ் வடிவில் எடுத்துக்கொண்டாலும் சிறப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பொழுது வெயில் காலம் என்பதால் டீ, பிஸ்கட்டை சூடாக சாப்பிட்டால் செட்டாகாது. ஆனால் டீ குடிக்கவேண்டும். எனவே இந்த முறையில் சாப்பிட்டால் டீ குடித்த மாதிரியும் இருக்கும். சில்லென்ற உணர்வும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கான ரெஸிப்பியையும் அவர் பகிர்ந்துள்ளார். பார்லே ஜி பிஸ்கட்டை எடுத்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். வழக்கம் போல பால், சுகர் எல்லாம் போட்டு டீ தயார் செய்துகொள்ளுங்கள். ஒரு சிறிய கிளாஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு குச்சியை வையுங்கள். பின்னர் அதில் பிஸ்கட் மற்றும் டீ ஆகியவற்றை இடுங்கள். பின்னர் அதனை ஃப்ரீசரில் வையுங்கள். சாய் பிஸ்கட் பாப்ஸிகிள்ஸ் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. பலரும் அவரது திறமையை பாராட்டி வருகின்றனர். மேலும் அதன் டேஸ்ட் நன்றாக இருக்கும் என்று நம்புவதாகவும் தங்களும் வீட்டில் இதனை முயற்சித்து பார்க்க விருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் ஃபுட் பிளாக்கர்ஸ் பெருகி வருகின்றனர். உணவு மீதான ஆர்வமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி, டேடி ஆறுமுகம் போன்ற யூடியூப் சேனல்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் டேடி ஆறுமுகம் தனது வீடியோக்களுக்கு கிடைத்த வரவேற்பால் மதுரையில் டேடி ஆறுமுகம் என்ற பெயரில் உணவகங்களை துவங்கியுள்ளார். வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற சேனலுக்கு கிடைத்த வரவேற்பை அறிந்த ராகுல் காந்தி, பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது, அவர்களுடன் தானும் சமைத்து மகிழ்ந்தார். அந்த வீடியோ மிகப்பெரிய ஹிட் அடித்தது.

வெங்காயம், மாங்காய், கற்பூரவள்ளி என ஆரோக்கியமான வகையில் சுட்ட பகோடா : நகுல் மனைவியின் வீடியோ பதிவு..!

இதே போல புட் ரிவியூ சேனல்களும் பிரபலமாகி வருகின்றன. பிரபலமான ஹோட்டல்களுக்கு சென்று அவர்களது உணவுகளை ருசித்து, அவை எப்படி இருக்கின்றன என்பதை தெரிவிப்பதே அதன் நோக்கம். குறிப்பாக இர்ஃபான் என்பவர் செய்துவரும் ஃபுட் ரிவியூ நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவருக்கு கடந்த வருடம் சில சேனல்கள் விருதுகள் அளித்து பாராட்டின.

 
Published by:Sivaranjani E
First published: