பாதாம் - ஆரோக்கியமான உலர் பழங்களில் (ட்ரை ப்ரூட்ஸ்களில்) ஒன்றாகும். கிட்டத்தட்ட அனைவரும் வாங்க கூடிய விலைகளில் கிடைக்கும் பாதாம்களை எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம் ஊறவைத்த பாதாமையும் சிலர் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
அப்படி சாப்பிடும் போது நம்மில் பெரும்பாலோர் பாதாமின் தோல்களை நிராகரிக்கிறோம்; தூக்கி போட்டு விடுகிறோம். ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? பாதாம் தோல்கள் பல வழிகளில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆம், இனிமேல் தெரியாமல் கூட பாதாம் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். ஏன்? எதற்காக? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
பாதாம் தோலை உரமாகப் பயன்படுத்தலாம் :
ஆமாம்! தாவரங்களில் பாதாம் தோலை உரமாகப் பயன்படுத்தலாம். பாதாம் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல், ஆன்டிவைரல் மற்றும் ப்ரீபயாடிக் பண்புகள் தாவரங்களில் வளர்சிதை மாற்றங்கள் (metabolites) மற்றும் வைட்டமின் ஈ எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. பாதாம் தோலை உரமாகத் தயாரிக்க, முதலில் பாதாம் தோல்களை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் அதை நன்றாக பொடி போல அரைக்க வேண்டும். இப்போது பாதாம் தோலில் இருந்து தயார் செய்த பொடியை உங்கள் செடிகளின் வர்களின் அருகில் போடவும்.
பாதாம் தோலை வெவ்வேறு வழிகளில் சாப்பிடலாம் :
பாதாம் தோலை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் அதை வெவ்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். எடுத்துக்காட்டிற்கு. பாதாம் தோலை நீங்கள் சட்னி வடிவிலும் உட்கொள்ளலாம். இதை செய்ய, பாதாம் தோலை ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு வேர்க்கடலையை வறுத்து, அதை பாதாம் தோலுடன் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் ஒரு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது வெங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகு தூள், சீரகம் சேர்த்து அதை நன்றாக வதக்கவும். அது ஆறிய பிறகு, இந்த கலவையில் அரைத்த பாதாம் தோல், வேர்க்கடலையை சேர்த்து தேவையான உப்பு, புளி சாறு சேர்த்து கலக்கவும். கடைசியாக கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து பாதாம் சட்னி உடன் கலந்து சாப்பிடவும்.
பாதாம் தோல்களை கொன்டு பாடி வாஷ் செய்யலாம் :
பாதாம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் பாடி வாஷ் ஆனது, ஆன்டி-ஏஜிங் பண்புகளின் உதவியுடன் சருமத்தை ஈரப்பதமாக்கி மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இதை செய்ய, 1 தேக்கரண்டி பாதாம் தோலில் 2 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி மஞ்சள், சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் தேன் கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு இந்த கலவையை பாடி ஸ்க்ரப்பர் மற்றும் ஃபேஸ் பேக்காக தடவவும்; அவ்வளவு தான்!
Also Read : தினமும் பாதாம் சாப்பிடுவதால் இதயத்திற்கு விளையும் நன்மைகள் என்ன?
இயற்கையாக உருவாகும் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு அங்கமுமே எதோவொரு வகையான நன்மைகளை வழங்கும் என்பதற்கு பாதாம்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Almond, Health Benefits