முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Mothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி

Mothers Day: அன்னையர் தினத்தன்று உங்கள் அம்மாவை ஆச்சரியப்படுத்த இந்த சூப்பரான ரெசிபி

அன்னையர் தின ரெசிபி

அன்னையர் தின ரெசிபி

ஒவ்வொரு ஆண்டும் அன்னையா் தினம் வெவ்வேறு தேதிகளில் வரும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது

  • 1-MIN READ
  • Last Updated :

இந்த உலகத்தில் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நலனுக்காக உழைக்கும் ஒரே ஜீவன் அம்மா தான்.  அத்தகைய அன்னையை போற்றும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து தாய்மார்களின் அன்பை மதிக்கவும் அங்கீகரிக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாள் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் அன்னையா் தினம் வெவ்வேறு தேதிகளில் வரும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் மே மாதம் 9ம் தேதி அன்று அன்னையா் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக அன்னையா் தினம் அமொிக்காவில் கொண்டாடப்பட்டது. அமொிக்காவைச் சோ்ந்த அன்னா ஜாா்விஸ் என்ற பெண்மணி அன்னையா் தின கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். அவருடைய அன்னை தான் இறப்பதற்கு முன்பாக அன்னையா் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினாா். ஆனால் அவருடைய அன்னை உயிரோடு இருக்கும் போது அன்னையா் தினத்தைக் கொண்டாட முடியவில்லை.

ஆனால் ஜாா்விஸ் எடுத்த முயற்சிகளின் விளைவாக, அவருடைய அன்னை இறந்து 3 ஆண்டுகள் கழித்து, அதாவது 1908ம் ஆண்டு மேற்கு வொ்ஜீனியாவில் உள்ள தூய ஆண்ட்ரூ மெத்தடிஸ்ட் ஆலயத்தில் முதன் முதலாக அன்னையா் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் குழந்தைகள் தங்கள் தாய்க்காக சில பரிசுகளை வழங்கி மகிழ்விப்பார்கள். மேலும், சில குழந்தைகள் அன்னையர் தினத்தன்று தங்களது தாய்க்கு ஒரு உணவை சமைத்துக்கொடுக்க விரும்புவார்கள். அப்படி இந்த நீங்களும் உங்கள் தாய்க்கு சர்பிரைஸ் கொடுக்க விரும்பினால், நீங்கள் செய்யக்கூடிய எளிய உணவு வகைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

1. சாக்கோ-டிப் சாண்ட்விச் குக்கீகள்

நீங்கள் விரும்பும் எந்த பிஸ்கட் அல்லது குக்கீயையும் எடுத்து அதனை சாக்லேட் சிரப்பில் டிப் செய்து பின்னர் பிரீஸரில் உறைய வைக்கவும். இந்த சூப்பர் இனிப்பு காட்டாயம் உங்கள் அம்மாவுக்கு பிடிக்கும்.

2. லெமனேட்

குக்கீ சாண்ட்விச் செய்ய விருப்பமில்லையா? கோடைகாலத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான பானத்தை செய்து கொடுங்கள். இந்த பானத்தை தயாரிக்க எலுமிச்சை சாறு, குளிர்ந்த நீர், சர்க்கரை மற்றும் சிறிது உப்பு மட்டுமே உங்களுக்கு தேவைப்படும். இவற்றை நன்கு கலந்து அதிக வேலை செய்யும் உங்கள் தாய்க்கு கொடுங்கள் போதும்.

3. மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி:

வாழைப்பழம், ஸ்ட்ராபெரி அல்லது அன்னாசி என உங்களுக்கு விருப்பமான எந்த பழத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பிளெண்டரில் போட்டு பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து மென்மையாகும் வரை அரைத்துக் கொள்ளுங்கள். அல்லது பழங்கள் மற்றும் சர்க்கரையை தயிருடன் சேர்த்து, புத்துணர்ச்சியூட்டும் ஸ்மூத்தி செய்து கொடுக்கலாம்.

4. சாலட் / பழ சாலட்

இந்த செய்முறை மிக எளிதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். காய்கறிகள் அல்லது பழங்கள் ஆகியவற்றை சேர்த்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி அதில் சுவைக்கேற்ப சீசனிங் செய்து உங்கள் அம்மாவுக்கு கொடுங்கள்.

5. சாண்ட்விச்

இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு இடையில் சாஸ்கள் மற்றும் சீஸ் உடன் வெள்ளரி, தக்காளி, லெட்யூஸ் போன்றவற்றை வைத்து உங்கள் தாய்க்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம்.

அன்னையர் தினத்தை கொண்டாட குழந்தைகள் பெரிய பரிசுகளை வழங்க வேண்டும் என்று ஒரு தாய் எப்போதுமே நினைக்க மாட்டாள். உங்கள் தாய்க்கு நீங்கள் செய்யும் சிறிய விஷயங்கள் கூட அவர்களுக்கு மிகப்பெரியதாக இருக்கும். எனவே, நீங்கள் மேற்கண்ட எளிய உணவுகளை தயார் செய்து உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.

First published:

Tags: Mother, Mothers day