ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சரும பராமரிப்பு முதல் புற்றுநோய் வரை... ஆரோக்கியம் நிறைந்த சாத்துக்குடி பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

சரும பராமரிப்பு முதல் புற்றுநோய் வரை... ஆரோக்கியம் நிறைந்த சாத்துக்குடி பழத்தின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

சாத்துக்குடி நன்மைகள்

சாத்துக்குடி நன்மைகள்

சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாத்துக்குடி சிட்ரெஸ் லிமெட்டா எனும் தாவரவியல் பெயரைக்கொண்டுள்ள சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றாகும். இதில் பொட்டாசியம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி 1 மற்றும் சரும பராமரிப்பிற்கு தேவையான பல்வேறு கனிமங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துளோடு இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பான தோல் என 3 சுவைகளையும் கொண்டிருப்பதாக அமைந்துள்ள இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதால் காய்ச்சல் நேரத்திலும் சாப்பிடலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இதோடு பல்வேறு உடல் நல பிரச்சனைக்கும் தீர்வு காணும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்நேரத்தில் சாத்துக்குடி சாப்பிடுவதற்கு முக்கியக் காரணம் என்ன? இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

சாத்துக்குடி பழங்களின் ஆரோக்கிய நன்மைகள்:

ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவித்தல் :

சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். மேலும் இந்த பழத்தில் எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் உள்ளது. எனவே நாம் தொடர்ச்சியாக சாப்பிடும் போது வயதான சருமத்தை விரைவில் நாம் அடைவதை தடுக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல்:

மொசாம்பியா எனப்படும் சாத்துக்குடியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக நாம் சாத்துக்குடி ஜுஸை சாப்பிடும்போது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இலவங்கப்பட்டை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துமா..? நிபுணர்கள் கருத்து

செரிமான பிரச்சனைக்குத் தீர்வு:

சாத்துக்குடியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அமிலங்கள் மற்றும் பித்த சுரப்பை அதிகரிப்பதன் மூலம் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக்குவதோடு தேவையற்ற நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

இதோடு சாத்துக்குடி ஜூஸில் சிட்ரஸ் அமிலங்கள் அதிகளவில் இருப்பதால், சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. சாத்துக்குடியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் இருப்பதால் கண்புரை உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது.

உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் பருகலாம். இதோடு எலும்புகள் வலுப்படையவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் ஞாபக மறதி பிரச்சனைக்கும் சாத்துக்குடி பழங்கள் உதவியாக உள்ளது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகளை சாத்துக்குடி கொண்டிருப்பதால் தான் அதீத காய்ச்சலினால் நாம் அவதிப்பட்டாலும் சாத்துக்குடி ஜுஸை பருகுவதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே இனி வரும் காலங்களில் மறக்காமல் சாத்துக்குடியை உங்களது உணவு முறையில் சேர்த்துப் பயன்பெற மறந்துவிடாதீர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Lemon