ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஸ்டஃப்டு தக்காளி செய்ய ரெசிபி..

ஸ்டஃப்டு தக்காளி செய்ய ரெசிபி..

ஸ்டஃப்டு தக்காளி

ஸ்டஃப்டு தக்காளி

stuffed tomato |  ஊட்டச்சத்து நிறைந்த தக்காளி காலை உணவாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஸ்டஃப்டு தக்காளியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். தக்காளி சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கும். தக்காளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே நிறைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலை உணவுக்கு லேசான உணவை சாப்பிட விரும்புகிறிர்களா? நீங்கள் தக்காளியை விரும்பி சாப்பிடுபவரா? சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களை காலையில் சாப்பிட நினைக்கிறீர்களா? அப்போ இந்த ஸ்டஃப்டு தக்காளி ரெசிபி உங்களுக்குதான்.

தேவையான பொருட்கள்

பெரிய தக்காளி - 3

உருளைக் கிழங்கு - 2

வெங்காயம்-1

மசாலா

மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்

இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

தனியாத் தூள் அரை டீஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்

துருவிய பனீர் - அரை கிண்ணம்

செய்முறை:

1. தக்காளியை மேல்புறம் சிறிது வெட்டி எடுத்துவிட்டு, அதில் உள்ள விதைகளை நீக்கக்கொள்ள வேண்டும்.

2. பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

3. அத்துடன், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து வதக்கவும், பின்னர் மசாலாவை தக்காளிக்குள் வைத்து, அதனை நான்- ஸ்டிக் தவாவில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தக்காளியை வைத்து பொரித்து எடுக்கவும்.

4. இப்போது டேஸ்டியான ஸ்ட்ஃப்டு தக்காளி ரெடி. இதனை காலை உணவாக சாப்பிடலாம் அல்லது மாலையில் ஸ்நாக்ஸ் போலவும் சாப்பிடலாம்.

First published:

Tags: Tomato