இன்று சாட் உணவுகளில் கொடிகட்டிப் பறக்கும் உணவு என்றால் அது french fries தான். அதன் மொறு மொறுப்பான தன்மையும், உருளைக்கிழங்கின் சுவையும் ஒரு பிளேட் சாப்பிட்டாலும் திருப்தியாக இருக்காது. மேலும் மேலும் சாப்பிடத் தூண்டும். மக்களும் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி சாப்பிடுவார்கள்.
இதற்கு அடிமையாகி தினமும் french fries சாப்பிடும் ஆட்கள் கூட உண்டு. இதை சமைப்பதும் சுலபம் என்பதால் வீட்டிலேயேவும் french fries செய்து விருப்பம் போல் எண்ணிக்கையில்லாமல் சுவைக்கின்றனர்.
ஆனால் இப்படி french fries சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கிறது ஆய்வு.
அதாவது நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள் எனில் ஒரு நாளைக்கு 6 french fries சாப்பிடுங்கள் போதும். முடிந்தால் அதற்கு ஈடுகட்டும் விதமாக காய்கறி , பழங்கள் சாலட் என ஆரோக்கிய உணவு எடுத்துக்கொள்ளுங்கள் என ஹார்வர்ட் பேராசிரியர் டி.ஹெச். சான் கூறுகிறார்.
ஏனெனில் உருளைக்கிழங்கு ஆரோக்கியம்தான் என்றாலும் அதை இப்படி எண்ணெய்யில் பொறித்து உண்பது ஒரு பிளேட் french fries உடலில் 200 கலோரிகளை செலுத்துகிறது. இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறார்.
french fries மட்டுமன்றி வறுத்து உண்ணும் எந்த உணவாக இருந்தாலும் சரி, ரெடிமேடாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை மீண்டும் எண்ணெய்யில் பொறித்து உண்டாலும் அவற்றில் கெட்ட கொழுப்புகள்தான் நிறைவாக உள்ளன. எனவே அவை இதயத்தின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கின்றன. இதனால் இறப்பைக் கூட சந்திக்கலாம் என எச்சரிக்கிறார்.
எனவே ஒரு நாளைக்கு 6 french fries க்கு மேல் சாப்பிடாதீர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.