முளை கட்டிய பாசிப்பயறுகளில் கலோரி மிக குறைவு. ஆனால், தரமான ஊட்டச்சத்துகள் அதிகம். நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை நிரம்பியுள்ள முளை கட்டிய பாசிப்பயறுகளில் குறைவான ஃபேட் இருக்கிறது. கொலஸ்ட்ரால் முற்றிலுமாக இல்லை. 100 கிராம் பாசிப்பயறில் 30 கலோரி மட்டுமே இருக்கிறது.
நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. சீலியாக் நோயால் பாதிக்கபட்டிருக்கும் மக்களுக்கு இது மிகச் சிறந்த உணவாகும். பாசிப்பயறில் மிக அதிக அளவில் விட்டமின் பி சத்துக்களும், ஃபோலேட் மற்றும் தியமின் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.
100 கிராம் அளவிலான பாசிப்பயறில் காப்பர், இரும்புச்சத்து, மேன்கனீஸ், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் சிங்க் போன்ற சத்துக்களும் உள்ளன. குறிப்பாக பாஸ்பரஸ் சத்து அபரிமிதமாக இருக்கும்.
பாசிப்பயறை முளை கட்டுவது எப்படி
நல்ல சுத்தமான தண்ணீரில் பாசிப்பயறை அலசி எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள தூசு மற்றும் குப்பைகள் அனைத்தும் அலசும்போது நீக்கிவிட வேண்டும். இனி பாசிப்பயறை 8 முதல் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பயறு ஊற வைத்திருக்கும் பாத்திரத்தின் மேல் பகுதியை துணியை வைத்து மூடிவைக்கவும்.
அடுத்த நாள் தண்ணீரை வடித்து விட்டு, ஈரமில்லாத பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இதில் சூரிய வெளிச்சம் படக் கூடாது. லேசாக பயிர் முளைக்கத் தொடங்கிய பிறகு, அதை துணியில் கட்டி வைத்து விடும். 4 நாட்கள் கழித்துப் பார்த்தால் முளைகட்டிய பாசிப்பயறு சாப்பிட தயார் நிலைக்கு வந்துவிடும்.
மதியம் 2 மணிக்கு மேல் பழங்கள் சாப்பிடக்கூடாதா.? ஊட்டச்சத்து நிபுணரின் பதில்
எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?
முளைகட்டிய பாசிப்பயறு சாலட் - முளை கட்டிய பாசிப்பயறுகளை வேக வைத்து, அதில் தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட், காப்சியம் மிளகாய், புதினா இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி எடுக்கவும். அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகத்தூள் சேர்த்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும்.
முளைகட்டிய பாசிப்பயறு அடை - முளை கட்டிய பாசிப்பயறை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், உப்பு, நறுக்கிய காய்கறிகள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிசறி எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாய் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, பாசிப்பயறு மாவுக் கலவையை தோசை போல சுட்டு எடுக்கவும். சுவையான ஸ்நாக்ஸ் தயார்.
வெகு விரைவாக உடல் எடையை குறைத்த நடிகைகள் : அதற்காக அவர்கள் சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா?
முளைகட்டிய பாசிப்பயறு கட்லெட் - பாசிப்பயறில் கட்லெட் செய்தால் காலை உணவாக அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் போல எடுத்துக் கொள்ளலாம். மசித்து வைத்த பாசிப்பயறு, அதனுடன் உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், உப்பு, மல்லித்தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து, கட்லெட் போல பிடிக்கவும். பின்னார் எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
பாசிப்பயறு உணவின் பலன்கள்
- கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
- உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
- ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு.
- மலச்சிக்கலுக்கு தீர்வு, செரிமானம் எளிதாகும்.
- ரத்த சோகைக்கு சிறந்த தீர்வு.
- முடி வளர்ச்சி மற்றும் சரும பராமரிப்பிற்கு நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.