முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூக்கிரட்டை கீரை சூப்... இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூக்கிரட்டை கீரை சூப்... இதை ட்ரை பண்ணுங்க..!

மூக்கிரட்டை சூப்

மூக்கிரட்டை சூப்

mookirattai soup | மூக்கிரட்டை கீரை ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்கிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே ரொம்ப சிரம்மப்படுவார்கள். அதனை தடுத்து சிறுநீர் சீராக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை கீரை பயன்படுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

தேவையான பொருட்கள்: 

மூக்கிரட்டை கீரை - 2

பூண்டு - 2 பல்

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும்போது, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

2. கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

3. நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும். ஆரோக்கியம் நிறைந்த மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.

4. இதனை வாரம் ஒருமுறை எடுக்க சிறுநீரக செயல் இழப்பை தடுக்க உதவுகின்றது.

First published:

Tags: Health Benefits, Siddha Medicine, Soup, Spinach