ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மதிய உணவுக்கு மொச்சை கொட்டை கூட்டு : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

மதிய உணவுக்கு மொச்சை கொட்டை கூட்டு : இந்த ரெசிபியை கவனியுங்கள்..!

மொச்சைக்கொட்டை கூட்டு

மொச்சைக்கொட்டை கூட்டு

மொச்சைக் கொட்டை கூட்டு குழம்புக்கு தொட்டுக்கொள்ளவும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் அருமையான உணவு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மொச்சைக் கொட்டை கூட்டு குழம்புக்கு தொட்டுக்கொள்ளவும், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளவும் அருமையான உணவு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மொச்சை கொட்டை - 2 1/2 கப்

மஞ்சள் - 1/4 tsp

உப்பு - தே.அ

அரைக்க :

தேங்காய் துருவியது - 1/4 கப்

காய்ந்த மிளகாய் - 3

சீரகம் - 1 tsp

சின்ன வெங்காயம் - 5

தக்காளி - 1

தாளிக்க

எண்ணெய் - 2 tsp

கடுகு - 1 tsp

உளுத்தம் பருப்பு - 1 tsp

கறிவேப்பிலை - ஒரு ஸ்பிரிங்

வெங்காயம் - 1

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

இரவு மொச்சைக் கொட்டையை ஊற வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை தோல் தனியாக நீங்கிவிடும். அதை நீங்கள் சுத்தம் செய்து நீக்கிவிடுங்கள்.

பின் அதைக் கழுவி குக்கரில் போட்டு மஞ்சள், உப்பு சேர்த்து 3 விசில் வரவிடுங்கள். வந்ததும் இறக்கிவிடுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்ததும் அதை வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையில் சேர்த்து கலந்து சிறு தீ வைத்து கொதிக்க விடுங்கள்.

இறுதியாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதில் ஊற்றி கலந்து பரிமாறுங்கள்.

மொச்சைக் கொட்டை கூட்டு தயார்.

First published:

Tags: Lunch