ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சமையலில் தவறுதலாக மஞ்சள் அதிகமாக சேர்த்து விட்டீர்களா..? உடனே சரி செய்யும் டிப்ஸ்..!

சமையலில் தவறுதலாக மஞ்சள் அதிகமாக சேர்த்து விட்டீர்களா..? உடனே சரி செய்யும் டிப்ஸ்..!

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சள் தூள் ஆனது வீட்டு சமையல், வீட்டு வைத்தியம், தோல் பராமரிப்பு மற்றும் இன்னும் பல தேவைகளுக்கு, மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மசாலாப் பொருளாகும். இதில் இயற்கையாகவே குர்குமின் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்களால் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தி, மெட்டபாலிசம், உடல் வலியைக் குறைத்தல் மற்றும் காயத்தை குணப்படுத்துதல் போன்ற திறன்களை நமக்கு வழங்குகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் பார்த்து பார்த்து பக்குவமாய் சமைக்கும் ஒரு குழம்பில் அல்லது ஒரு பொரியலில் தவறுதலாக நிறைய மஞ்சள் தூளை சேர்த்து விட்டீர்கள் என்றால், "அடச்சே! மொத்த சுவையும் கெட்டு போய் விடுமே" என்று சலிப்படையவோ, "கொஞ்சம் கவனமாக இருந்து இருக்கலாம்!" என்று உங்கள் மீது நீங்களே கோபம் கொள்ளவோ வேண்டாம். ஏனெனில் ஒரு உணவில் அதிகப்படியாக சேர்க்கப்பட்ட மஞ்சள் தூளை "அகற்ற" சில சூப்பரான தந்திரங்கள் உல்ளன.

மஞ்சள் தூள் ஆனது வீட்டு சமையல், வீட்டு வைத்தியம், தோல் பராமரிப்பு மற்றும் இன்னும் பல தேவைகளுக்கு, மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மசாலாப் பொருளாகும். இதில் இயற்கையாகவே குர்குமின் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்களால் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தி, மெட்டபாலிசம், உடல் வலியைக் குறைத்தல் மற்றும் காயத்தை குணப்படுத்துதல் போன்ற திறன்களை நமக்கு வழங்குகிறது. இருப்பினும் அமிர்தமாக இருந்தாலும் அளவாகவே சாப்பிட வேண்டும் அல்லவா?

உணவில் அதிகமாக மஞ்சள் சேர்த்தால் என்ன ஆகும்?

ஒவ்வொரு மூலப்பொருள் மற்றும் மசாலாப் பொருட்களும் ஒரு சுவையான உணவின் தலைவிதியை தீர்மானிப்பதில் ஒரு தனித்துவமான பாத்திரத்தை வகிக்கின்றன, அந்த பட்டியலில் மஞ்சள் தூளும் உள்ளது. மஞ்சள் தூளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. ஆனால் அதை அதிகமாக சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது உடல் சூட்டை அதிகரித்து, வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும், சில சமயங்களில் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். எனவே எப்போதும் மஞ்சள் தூளை குறைந்தபட்ச அளவில் சேர்ப்பதே நல்லது.

உணவில் அதிகப்படியான மஞ்சளை சமநிலைப்படுத்துவதற்கான எளிமையான டிப்ஸ்:

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு "அதிகப்படியான மஞ்சளை" சரிசெய்யும் ஒரு எளிமையான வழி ஆகும். ஆம், உங்கள் கறிகளில் அதிகப்படியான மஞ்சளை நீங்கள் சேர்க்கும் போதெல்லாம், அதில் சில புதிய உருளைக்கிழங்கு துண்டுகளை வெட்டி, அதை சிறிது தண்ணீரோடு சேர்த்து, மொத்தமாக வேக வைக்கவும். உருளைக்கிழங்கு உங்கள் சமையலில் இருக்கும் அதிகப்படியான மஞ்சள் தூள் அல்லது உப்பை ஊறவைத்து, சுவையை சமநிலைப்படுத்தும்.

கோடைகாலத்தில் இந்த ஐந்து மசாலாக்களை குறைவாக சாப்பிடுவது நல்லது..!

தயிர், உப்பு மற்றும் மசாலா

தயிர், உப்பு, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றின் கலவையை உருவாக்கி, அதை நன்றாக கலக்கி, மஞ்சள் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவு பொருளில் சேர்க்கவும், இந்த கலவையானது அதிகப்படியான மஞ்சள் தூளை சரிசெய்ய உதவும்.

புளிப்பான பொருட்களை சேர்க்கவும்

உணவில் உள்ள அதிகப்படியான மஞ்சளை சமப்படுத்த மற்றொரு எளிய வழி, புளி பேஸ்ட், ஆம்லா தூள் அல்லது ஆம்சூர் தூள் போன்ற புளிப்பு சுவை மிக்க மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களைச் சேர்க்கலாம். இது மஞ்சள் தூளின் கசப்பான சுவையை சமநிலைப்படுத்த உதவும்.

சர்க்கரை சேர்க்கவும்

சர்க்கரையை தண்ணீர் அல்லது ப்ரெஷ் க்ரீமுடன் கலந்து, உணவில் சேர்க்கவும், இது மஞ்சள் தூளின் கசப்புச் சுவையைக் குறைக்க உதவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Cooking tips, Kitchen Hacks, Turmeric