முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெயிலுக்கு இதமான புதினா சட்னி செய்ய ரெசிபி...!

வெயிலுக்கு இதமான புதினா சட்னி செய்ய ரெசிபி...!

புதினா சட்னி

புதினா சட்னி

Mint Chutney | புதினா சட்னியில் கொஞ்சம் அதிகமாக கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் கொத்தமல்லியில் இருக்கும் நன்மைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பைத் தூண்டும் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

 உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை புதினா. இது வெயிலுக்கு உடலை குளுமையாக வைத்திருக்க உதவும். புதினா சாப்பிட்டால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமான பிரச்சனையை சரிசெய்யவும் உதவும். எனவே இத்தகைய புதினாவை சட்னியாக செய்து, விருப்பமான  உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு

வெங்காயம் - 1 (நறுக்கியது)

வர மிளகாய் - 4

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

புளி - 1 சிறிய உருண்டை

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் புதினாவை நீரில் நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

2. பின்னர் வெங்காயம் சேர்த்து, வதக்க வேண்டும். பின் அத்துடன், புதினா மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். இறுதியில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து, 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

3. அதன் பின்பு அதனை அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பிறகு வதக்கிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு  அரைத்துக் கொள்ள வேண்டும்.

4. இப்போது சுவையான புதினா சட்னி ரெடி.

5. இதனை சாதம், இட்லி, ஆம்லேட், சமோசா என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.

First published:

Tags: Mint Chutney