தித்திக்கும் பொங்கல் வந்துவிட்டது. எல்லா வருடமும் ஒரே மாதிரியான பொங்கலை வைத்து போரடித்து விட்டது. வித்தியாசமாகவும் அதே சமயம், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பவர்கள் சிறுதானியங்களை முதன்மைப் பொருளாக வைத்து பொங்கல் வைக்கலாம்.
சிறுதானியங்களில் 25 சதவீத புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. அதோடு வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவைகள் நிறைந்துள்ளன. கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றை வைத்து வித விதமான உணவுகளை செய்யலாம். குறிப்பாக சிறுதானியங்களை மையமாக வைத்து, டேஸ்டியான அதே நேரத்தில் ஹெல்தியான பொங்கலை தயார் செய்யலாம்.
தேவையானப் பொருட்கள்
திணை – 1 டம்ளர்
பாசிப்பருப்பு – 1/4 டம்ளர்
தண்ணீர் – 4 1/2 டம்ளர்
வெல்லம் – 1 டம்ளர் (பொடித்தது)
ஏலக்காய் – 4
தேங்காய் துருவல் - 1/4 டம்ளர்
முந்திரி பருப்பு – 6-8
செய்முறை
30 நிமிடம் திணை மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில், 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பாசிப்பருப்பை, ஒருமுறை கழுவி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கவும்.
பாசிப்பருப்பு பாதி வெந்த பின்னர், திணை அரிசியை போட்டு, மீதமுள்ள 3 1/2 குவளை தண்ணீரையும் ஊற்றவும். இடையிடையே அடிபிடிக்காமல் கிளறி விடவும்.
Pongal Recipe : பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் செய்ய ரெசிபி...
தூளாக்கிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு 1/4 குவளை நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சுத்தமான வெல்லமாக இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். முந்திரி பருப்பை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
திணை அரிசியும், பாசிப்பருப்பும் நன்றாக வெந்து, குழைவான பதத்தை அடைந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் அல்லது வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் அடுப்பை அணைத்து விடவும். அதில் ஏலக்காய் தூள் மற்றும் முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால், பொங்கல் சூடு சற்று குறைந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி சாப்பிடவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Millet Recipes, Pongal, Pongal festival