மிளகு குழம்பு பல வகைகளில் செய்யலாம். பூண்டு சேர்த்தது, சின்ன வெங்காயத்தில் தாளித்தது, மிளகு அரைத்தது என பலவகைகளில் செய்யலாம். செட்டிநாடு மிளகு குழம்பு ருசிக்கும் ஐயர் வீட்டு மிளகு குழம்பு ருசிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். இன்று இந்த பதிவில் ஈஸியாக எல்லோர் வீடுகளிலும் பொதுவாக செய்யக்கூடிய மிளகு குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி வீடியோ இந்தியன் ரெசிபீஸ் தமிழ் குக்கிங் சேனலில் இடம்பெற்றுள்ளது. கட்டாயம் இந்த ரெசிபியை ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.
குறிப்பாக குளிர் காலத்தில் ஜலதோஷம், இருமல், சளி தொல்லைக்கு இதுவே மருந்து. வெயில் காலத்தில் செய்தால், காரம் மட்டும் குறைத்து கொள்ளுங்கள். காரணம், மிளகு என்பதால் உடல் சூடு அதிகரித்து விடும்.
தேவையான பொருட்கள் :
மிளகு, வெந்தயம், தனியா,
சின்ன வெங்காயம், புளி தண்ணீர், கறிவேப்பிலை, தனியா, நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, வெல்லம்.
Cook With Comali 3 : இதை செய்யாமல் என் உயிர் போகாது.. பாலா உருக்கம்!
செய்முறை:
1. முதலில் கடாயில் மிளகு, சீரகம், வெந்தயம், பச்சை அரிசி சேர்த்து வறுத்து எடுத்து அதை மிக்ஸியில் பொடியாக்கி கொள்ள வேண்டும்.
2. அடுத்தது, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், தனியா , காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, அதை மிக்சியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
4. அதனுடன் நறுக்கிய பெரிய
வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். கூடவே அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியாவுக்கு இவ்வளவு கஷ்டங்களா?
5. இப்போது தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
6. கொதித்த பின்பு அரைத்து வைத்துள்ள மிளகு பவுடரை சேர்க்க வேண்டும்.
7. கடாயை மூடி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
8. 15 நிமிடங்கள் கழித்து சிறிதளவு பூண்டு சேர்த்து, கொஞ்சமாக வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
9. புளிப்பு, இனிப்பு கலந்த சுவையில் குழம்பு திக்கானதும் இறக்கினால் சுட சுட மிளகு குழம்பு தயர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.