• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 12 ஆண்டு தீவிரமான தலைவலியால் அவதிப்பட்ட முதியவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்த உணவு!

12 ஆண்டு தீவிரமான தலைவலியால் அவதிப்பட்ட முதியவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்த உணவு!

வரப்பிரசாதமாக கிடைத்த உணவு

வரப்பிரசாதமாக கிடைத்த உணவு

12 ஆண்டு தீவிரமான தலைவலியால் அவதிப்பட்ட முதியவருக்கு உணவு முறையில் செய்த ஒரு மாற்றம் மூன்றே மாதங்களில் தலைவலியிலிருந்து முழுவதுமாக நிவாரணம் அளித்துள்ளது.

  • Share this:
60 வயது முதியவர் ஒருவர், 12 ஆண்டுகளாக மைக்ரேன் எனப்படும் தீவிரமான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் இவர் முயற்சி செய்தாலும் இவருடைய தலைவலி குறையவே இல்லை, தீர்வும் கிடைக்கவில்லை. ஆனால், இவர் உணவு முறையில் செய்த ஒரு மாற்றம் மூன்றே மாதங்களில் தலைவலியிலிருந்து முழுவதுமாக நிவாரணம் அளித்துள்ளது.

மைக்ரேன் பாதிக்கப்பட்ட முதியவர் சில நேரங்களில் 72 மணி நேரம், அதாவது 3 நாட்கள் வரை கூட நீடித்துள்ளது, அந்த நாட்களில் எதுவுமே செய்ய முடியாமல் நரகமாக உணர்ந்ததாக நாள் முழுவதும் படுக்கையில் சுருண்டு படுத்திருந்ததாக தெரிவித்தார்.

மைக்ரேன் பாதிப்படைந்த முதியவர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இவர் ஒரு புகைப்பட கலைஞர் என்றும், தன்னுடைய வேலைக்கு மைக்ரேன் மிகப்பெரிய தடையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக மருத்துவ அறிக்கை கூறியுள்ளது.

ALSO READ |  'எம்.ஏ இங்கிலிஷ் டீக்கடை' : 26 வயது பெண்ணின் புதுவித முயற்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இவர் பச்சை காய்கறிகள் மற்றும் கீரை உணவுகளை உண்ண ஆரம்பித்த பிறகு சில நாட்களிலேயே மைக்ரேன் நின்றுவிட்டது. "என் வாழ்க்கை எனக்கு திரும்பக் கிடைத்துவிட்டது. என்னுடைய உடலுக்கு நான் இனிமே சிறைக்கைதியாக இனிமேலும் இருக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

மைக்ரேனால் அவதிப்பட்டு வந்த முதியவர் இறைச்சியை, குறிப்பாக சிவப்பு இறைச்சியை உண்பதை குறைத்து, பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட்டது மைக்ரேன் தீர்வாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இதைப் பற்றிய மருத்துவ ஆய்வுகள் கூறுவது பின்வருமாறு.,

மைக்ரேன் எனப்படுவது மண்டை வெடித்து விடுமோ என்று நாம் நம்மை அச்சுறுத்தக் கூடிய அளவுக்கு மிகவும் தீவிரமான தலைவலி. மைக்ரேன் நீண்ட கால நரம்புகளின் பாதிப்பால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பத்து நிமிடம் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்க கூடிய மைக்ரேன் ஒரு ஜெனிட்டிக் குறைபாடு என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ |  கதறி அழுத சந்திரபாபு நாயுடு - சட்டமன்றத்தில் அவமானம் - சபதம் எடுத்து வெளிநடப்பு

சிலநேரங்களில் எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் தலைவலி அதிகரிக்கிறது என்பதை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கு நோயாளிகள் முயற்சி செய்வார்கள். ஆனால், குறிப்பிட்ட உணவுகள் மைக்ரேனை அதிகப்படுத்தும் என்று அதிகாரபூர்வமான ஆய்வுகள் எதுவும் இல்லை என்று மைக்ரேன் ஆய்வு ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இந்த முதியவர் தினமும் எவ்வகையான உணவுகளை சாப்பிட்டார் என்பது பற்றிய விவரங்கள்:

பாலக் கீரை, கேல் உள்ளிட்ட உள்ளிட்ட அடர் பச்சை நிற கீரைகள் தினமும் சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்டு வந்துள்ளார். நான்கு கோப்பைகள் க்ரீன் ஸ்மூத்தி, முழு தானியங்கள், சிவப்பு இறைச்சி ஆகியவற்றை மிகக் குறைந்த அளவில் சாப்பிட்டார்

ஆய்வாளர்கள் ஆலோசனையின் படி, இந்த உணவைத்தான் முழுவதுமாக பின்பற்றினார் என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலும், நோயாளியின் உணவுப்பழக்கம் மீதான கட்டுப்பாடோ இல்லை என்றாலும் இவர் ஒரு உணவு டைரியை பயன்படுத்தி வந்துள்ளார். இதுமட்டுமின்றி மைக்ரேனை அதிகப்படுத்தக்கூடிய ஒரு சில உணவு வகைகளான சாக்லேட், காஃபீன் உலர்பழங்கள், சீஸ் ஆகியவற்றை இவர் நிறுத்தியுள்ளார் என்பதும் ஆய்வில் உள்ளது.

ALSO READ |  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

இந்த முதியவருக்கு மைக்ரேன் எவ்வாறு சரியாக உள்ளது என்பதை பற்றி ஆய்வாளர்கள் ‘பச்சைக் கீரைகள் பீட்டாகரோட்டின் மற்றும் உடலிலுள்ள அழற்சியை எதிர்க்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. எனவே இவை இவர் உடலில் உள்ள பீட்டா கரோட்டின் சீரம்களைஅதிகப்படுத்தி இருப்பதால் மைக்ரேன் சரியாக இருக்கலாம்’ என்று தெரிவித்தனர். இந்த உணவு வகைகளை தொடர்ந்து உண்டு வந்ததால், இவருக்கு இருந்த அலர்ஜிகளும் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: