• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மழை காலத்திற்கு ஏற்ற கற்பூரவள்ளி டீ செய்ய ரெசிபி...

மழை காலத்திற்கு ஏற்ற கற்பூரவள்ளி டீ செய்ய ரெசிபி...

கற்பூரவள்ளி டீ

கற்பூரவள்ளி டீ

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

  • Share this:
இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை பருகலாம். இன்று இந்த டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்

கற்பூரவள்ளி இலைகள் - 5,

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்புன்,

டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

தேன் - தேவைக்கு,

தண்ணீர் - 2 கப்.



செய்முறை

கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

மேலும் படிக்க...சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்

குழந்தைகளின் மாந்தம் நீங்க கற்பூரவள்ளி இலைச் சாறு (5 மில்லி) அளவுக்கு எடுத்து குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் விலகும்.

மேலும் படிக்க...பன்னீர் டிக்கா செய்ய ரெசிபி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: