வெந்தய கீரை கோழி குழம்பு எப்படி செய்வது?

குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள்.

குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள்.

  • Share this:
வெந்தய கீரை இலைகளுடன் செய்யப்படும் இந்த கோழிக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக கோழிக்கறி உடலுக்கு சூடு என்பார்கள். அதனால் மிகவும் குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள். அதேபோலதான் வெந்தைய கீரையையும் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் உணவில் ருசியும் கூடும். இதனை மெத்தி சிக்கன் என்றும் கூறுவார்கள்.
தேவையான பொருட்கள்

 

கோழி கறி – 1/2 கிலோ

வெந்தய கீரை – 1 கட்டு

வெங்காயம் – 2

தயிர் – 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

தக்காளி – 2

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

சோம்பு – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி

தனியா தூள் – 2 தேக்கரண்டி

சீரக தூள் – 1/2 தேக்கரண்டி

சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி



செய்முறை :
ஒரு பாத்திரத்தில்  எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், சோம்பு போட்டு தாளிக்கவும். அதன் பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் கோழி கறி, தயிர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். அவை நன்றாக வதங்கியவுடன் தனியா, சீரகம், மிளகாய், மஞ்சள் மற்றும்  சோம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவிட்டு இறக்கவும்.
Published by:Vaijayanthi S
First published: