வரலட்சுமி நோன்பு: நடிகை உமா ரியாஸ் வீட்டு பெஸ்ட் மெதுவடை சீக்ரெட் இதுதான்!

உமா ரியாஸ் டிப்ஸ்

குக்கிங் ஷோக்களில் கலக்கிய நடிகை உமா ரியாஸ் உளுந்து வடைக்கு ஒரு டிப்ஸ் சொல்லுறாங்க

 • Share this:
  வரலட்சுமி விரதம் வழிபாடு இன்று நம் வீடுகளில் களைக்கட்டும். கண்டிப்பாக விருந்து சமையலும் இருக்கும் அதில் மெதுவடை இல்லாமல் இருக்காது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த மெதுவடை புசுபுசுன்னு சாஃப்டா வர நடிகை உமா ரியாஸ் ஒரு டிப்ஸ் சொல்லியிருக்காங்க. அவங்க வீட்டுல எப்ப மெது வடை சுட்டாலும் இப்படி தான் செய்வாங்களாம். நீங்களும் தெரிஞ்சிவச்சிக்கோங்க யூஸ் ஆகும்.

  சுமங்கலிப் பெண்கள் கொண்டாடுகிற பண்டிகையாக பார்க்கப்படும் இந்த வரலட்சுமி நோன்பு மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. புகுந்த வீட்டில் இந்த பூஜை கொண்டாடுகிற வழக்கம் உள்ளவர்கள், தவறாமல் கடைப்பிடிப்பார்கள். இந்த பூஜை மூலம் மனநிம்மதியும் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அம்மனைக் கலசத்தில் நிறுத்தி அலங்காரங்கள் செய்து, வீட்டுக்குள் அழைத்து, பூஜை செய்வது  இந்த நோன்பின் வழக்கம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்பின்பு சாமிக்கு வீட்டில் சுத்தமாக சமைத்த அனைத்து உணவுகளையும் படைப்பார்கள். சர்க்கரை பொங்கல் தொடங்கி வடை, பாயாசம், இட்லி. கொழுக்கட்டை, நைவேத்தியங்கள், பட்சணங்கள், சுண்டல், பழங்கள் போன்றவற்றை வைத்து படையல் போடுவார்கள். இந்த விஷேசம் மட்டுமில்லை, வீட்டில் எந்த பண்டிகையாக இருந்தாலும் அதில் தவறாமல் மெது வடை இடம்பெற்றுவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வடை இல்லாமல் விருந்து இல்லை. இந்த மெதுவடையில் இல்லத்தரசிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை உளுந்தை எவ்வளவு நேரம் ஊற வைத்து அரைத்தாலும் வடை சாஃப்டாக இருக்க மாட்டுது என்பது தான். கவலைய விடுங்க, விஜய் டிவியில் குக்கிங் ஷோக்களில் கலக்கிய நடிகை உமா ரியாஸ் உளுந்து வடைக்கு ஒரு டிப்ஸ் சொல்லுறாங்க பாருங்க. அவங்க வீட்டில எல்லா பண்டிகை நாட்களிலும் இப்படி தான் வடை சுடுவாங்களாம்.  உளுந்தை ஊற வைக்கும் போது ஒரு கைப்பிடி பச்சரியைச் சேர்த்து ஊற வையுங்கள். இரண்டும் சேர்த்து 30 நிமிடம் ஊறினாலே போதுமாம் வடை புசுபுசுன்னு வந்துடும். அதிக நேரம் ஊற வைத்தாலும் பிரச்சனை இல்லை ஆனால், பச்சரிசி சேர்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். ஒருமுறை இந்த டிப்ஸை ஃபலோ பண்ணி பாருங்க.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: