பருவகால மாற்றங்கள் நிகழும் இந்த காலகட்டத்தில் குளிர், காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அனைத்து வயதினருக்கும் அவசியம். இதற்கு நமது வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேநீரை உருவாக்கலாம்.
க்ரீன் டீ, ப்ளாக் டீ, இஞ்சி டீ என பல்வேறு வகை தேநீர்கள் உள்ள நிலையில், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலாக்களை கொண்டு தயாரிக்கப்படும் மசாலா தேநீர் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. அதேபோல கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாக இருந்தாலும், ப்ளாக் டீ அதன் தனித்துவமான சுவை மற்றும் பாலிபினால்களின் உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றது, இது நமது செல்களை புத்துணர்ச்சியாக்குகிறது. மேலும் மசாலா தேநீர் ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டுள்ளது.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா தேநீர் தயாரிப்பு முறைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 1 துண்டு
கிராம்பு - 1ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 2
மிளகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
தேன் - 1/2 ஸ்பூன்
துளசி - 1 கைப்பிடி
புதினா - 10 இலைகள்
செய்முறை :
இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து காற்று புகாத ஜாடியில் சேகரித்து வைத்து கொள்ளவும். நீங்கள் தேநீர் தயாரிக்கும் போது இந்த மசாலாவை எடுத்து, அதனுடன் புதினா, தேன், துளசி சேர்த்து மசாலா தேநீர் தயாரிக்கலாம். தேநீர் தயாரிக்க, தண்ணீரை கொதிக்க வைத்து தேவையான அளவு மசாலாவை எடுத்து அதனுடன் சேர்த்து கொதிக்க விடவும், இப்போது இரண்டு முதல் மூன்று இலைகள் துளசி மற்றும் புதினாவை சேர்த்து வேகவைக்கவும். பின்னர் இதனை ஆறவைத்து வடிகட்டி, உங்கள் சுவைக்கு ஏற்ப தேன் சேர்த்தால் ஆரோக்கியமான மசாலா தேநீர் ரெடி!.
இந்த தேநீரில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாக்கள் நன்மைகள் :
இஞ்சி : இஞ்சி பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது, இது சளி மற்றும் இருமல் காரணமாக ஏற்படும் அசவுகரியத்தை எளிதாக்குகின்றன.
கிராம்பு - காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு கிராம்பு ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் என்று கூறப்படுகிறது. இதில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படுவதாக அறியப்படுகிறது.
இலவங்கப்பட்டை - இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள பல்வேறு வகையான நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
also read : சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா ? தண்ணீரை எப்படி குடித்தால் உடலுக்கு நல்லது?
கருப்பு மிளகு - கருப்பு மிளகில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது மார்பு சளியையும் குணப்படுத்துகிறது. இது ஒரு நல்ல ஆண்டிபயாடிக்காக செயல்படும் மற்றும் வைட்டமின் சி யும் நிறைந்துள்ளது. பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகு சேர்த்து அருந்தினால் இருமல், மூக்கு ஒழுகுதல் போன்ற குளிர்கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மஞ்சள் - மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். ரத்தத்தைச் சுத்தகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்
also read : இயற்கையான முறையில் சுருட்டை முடியை பராமரிப்பது எப்படி ? டிப்ஸ் இதோ..
தேன்- தேன் தொடர்ச்சியான இருமலை குணப்படுத்த உதவும் என அறியப்படுகிறது. இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் தொண்டை புண்களை ஆற்றுவது மட்டுமல்லாமல், தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.
துளசி - துளசி பல சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது, சளி மற்றும் இருமல் முதல் மூச்சுக்குழாய் அழற்சி வரை அனைத்து விதமான குளிர்கால பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் தருகிறது. துளசி தண்ணீரை தினமும் அருந்தி வரலாம்.
புதினா - புதினா தொண்டை எரிச்சல், சளி, இருமல் பிரச்சனைகளை சரி செய்வது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Herbal Tea