ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Pongal Recipe 2023 | மசாலா பொங்கல் செய்ய ரெசிபி இதோ..!

Pongal Recipe 2023 | மசாலா பொங்கல் செய்ய ரெசிபி இதோ..!

மசாலா பொங்கல்

மசாலா பொங்கல்

Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு வழக்கமாக செய்யும் பொங்கலை போன்று அல்லாமல் மசாலா பொங்கல் செய்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த பொங்கலுக்கு புதுமையாக மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையில் இந்த மசாலா பொங்கலை வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்தமான உணவாக மாறிவிடும். அதன்பின்பு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி மசாலா பொங்கலை செய்து தரச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

குக்கரில் வேக வைக்க

பச்சரிசி - 1 கப்

பாசி பருப்பு -½ கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள்  -2 ½ டீஸ்பூன்

தக்காளி - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

பொங்கலுக்கு மசாலா

எண்ணெய் -3

நெய் -  1 ½ டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம்  - 1 டீஸ்பூன்

மிளகு -  1 டீஸ்பூன்

பச்சை மிளகாய்-2

இஞ்சி -1 டீஸ்பூன்

முந்திரி - 3 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1

பெருங்காயத்தூள்  ½ டீஸ்பூன்

கருவேப்பிலை சிறிது

மல்லித்தூள் - 1 ½ டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

துருவிய தேங்காய் -4 டீஸ்பூன்

2 கப் தண்ணீர்

உப்பு தேவையான அளவு

செய்முறை

1. முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொண்டு அதில் பச்சரிசி, பாசி பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி பழம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்பு குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி வைத்து விடுங்கள். அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

3. பிறகு எண்ணெய் சூடு ஏறியதும் அதில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்பு இதனுடன் முந்திரியையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

4. பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.பின்னர் பெருங்காயத்தூள், சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

5. அதன் பின்பு இதனுடன் மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மசாலா நன்றாக வதக்கியவுடன் துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளவும்.

6. தேங்காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதன் பின் நன்றாக மசாலா கொதித்தவுடன் குக்கரில் வேகவைத்த பச்சரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கொழையுமாறு கிளறி விடவும். 

7. பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து  கொத்தமல்லியை சிறிது சிறிதாக தூவி விடுங்கள். அவ்வளவுதான் மசாலா பொங்கல் தயாராகி விட்டது.

First published:

Tags: Food recipes, Pongal, Pongal 2023