• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சூப்பரான ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இதோ ரெசிபி..

சூப்பரான ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. இதோ ரெசிபி..

மசாலா கடலை

மசாலா கடலை

சுவையான மசாலா கடலை வீட்டிலேயே எளிதில் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

  • Share this:
மசாலா கடலை மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும். இது ஒரு மொறுமொறுப்பான மற்றும் காரசாரமான மாலை நேர ஸ்நாக்ஸ். இதனை விரைவாகவும் மிகவும் சுலபமாகவும் செய்யலாம். சுவையான மசாலா கடலை வீட்டிலேயே எளிதில் செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

மசாலா கடலை செய்ய தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 2 கப் (400 grams)

கடலை மாவு - 8 தேக்கரண்டி (80 grams)

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

ஆரஞ்சு ஃபுட் கலர் - 1 சிட்டிகை

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தேவையான அளவு உப்பு

கருவேப்பிலை சிறிதளவு

எண்ணெய் பொறிக்க தேவையான அளவு



செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுவை போட்டுக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு,சீரகம், மிளகு தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஆரஞ்சு ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அதனுடன் வேர்க்கடலை சேர்த்து கொள்ளவும். எல்லா கடலைகளிலும் மசாலா படும்படி நன்றாக கலந்து கொள்ளவும்.

மேலும் படிக்க... சமையலுக்கு தேவையான சில டிப்ஸ்...

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் தயாராக வைத்துள்ள மசாலா வேர்க்கடலை உதிர்த்து சேர்த்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு பொரித்தெடுக்கவும். அவ்வப்போது ஒரு கரண்டி வைத்து கிளறவும், அப்பொழுதுதான் வேர்கடலை சமமாக வேகும்.
நுரை அடங்கிய பின்னர், எண்ணெய் வடித்து தனியே வைக்கவும்.
சிறிதளவு கருவேப்பிலையை அதே எண்ணெயில் சேர்த்து பொரித்து மசாலா வேர்க்கடலையுடன் கலந்து கொள்ளவும். இப்போது சுவையான மசாலா கடலை ரெடி.

மேலும் படிக்க... கருப்பு உளுந்து கஞ்சி செய்ய ரெசிபி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: